பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் போற்றப்பட்டவர் பாடகர் மனோ. தெலுங்கு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த மனோ அவர்களின் இயற்பெயர் நாகூர் சாஹேப் ஆகும். மனோ பின்னணி பாடகர், குரல் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, துளு, கொங்கனி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மொழித் திரைப்படங்களில் 35000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் மனோ.
இது தவிர, உலகம் முழுவதும் 3000 திற்கும் அதிகமான மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு பாடியுள்ளார் மனோ. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தெலுங்கு படங்களுக்கு மனோ அவர்கள் தான் டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1986 ஆம் ஆண்டு ‘பூவிழி வாசலிலே’ என்ற திரைப்படத்தில் பாட இசைஞானி இளையராஜா அவர்கள் மனோவிற்கு வாய்ப்புக் கொடுத்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ‘செண்பகமே’, ‘மதுர மரிக்கொழுந்து’, ‘தில்லானா தில்லானா’, ‘முக்காலா முக்காபுலா’ போன்ற மெகாஹிட் பாடல்களை பாடியுள்ளார். ‘சின்னத்தம்பி’ படத்தில் ‘தூளியிலே’ பாடலைப் பாடியதற்காக தமிழ்நாடு அரசின் விருதை வென்றார்.
இது தவிர தற்போது சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜுனியர் ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துக் கொண்டு வருகிறார். மெலடி பாடல்களை கேட்போரின் மனமுருகும் அளவிற்கு பாடுவார் மனோ.
இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்தே கிட்டத்தட்ட 500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளர் மனோ. இசையமைப்பாளர் தேவா அவர்களுடனும் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். மெலடி பாடல்களை அதிகமாக பாடியுள்ள மனோ அவர்களை முதல் முறையாக கானா பாடலை பட வைத்தவர் இசையமைப்பாளர் தேவா அவர்கள் தான். மனோ முதலாவதாக பாடிய கானா பாடல் ‘டாலக்கு டோல் டப்பிமா ‘ என்ற பாடல் தான் அது என்பது குறிப்பிடத்தக்கது.