எம்ஜிஆர் குணம் விஜய்கிட்ட அப்படியே இருக்கு…! எது என்று தெரிகிறதா?

By Sankar Velu

Published:

சினிமாவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும்போதே அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய். இது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதே நேரம் விஜய் அரசியலுக்கு வரும் முன்பே பல நற்பணிகளை செய்துள்ளார். இவரைப் பற்றி டைரக்டர் பிரவீன் காந்தி இப்படி சொல்கிறார்.

தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். அந்த வகையில் நாளை உலகப்பட்டினி தினம் வருகிறது. இந்த வார்த்தையே தப்பு. இனி வரும் காலங்களில் உலகப் பட்டினியில்லா தினம் என்று வர வேண்டும்.

உலகப் பட்டினி தினத்திற்கு 234 தொகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது நல்ல விஷயம். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். விஜய் சாரோட டீம் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்காங்க. இவர்களும் செய்து கொண்டே இருக்காங்க. மக்களும் அவரது கட்சியில் சேர்ந்து கொண்டே இருக்காங்க.

நாளை (28ம் தேதி) இந்தப் பட்டினி தினத்தையொட்டி அன்னதானம் செய்வது சிறப்புக்குரியது. இது அரசியல் பார்வையில் பண்ணினாலும் தப்பில்லை. இது அவரது அடிமனதில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் இருந்து தான் உருவாகி இருக்கும் என்று நான் பார்க்கிறேன்.

Vijay
Vijay

விஜயைப் போல மற்ற நடிகர்களும் நாளை செய்தால் நல்லது. தொடர்ந்து செய்ய வேண்டும். வரும் போது எதையும் எடுத்துட்டு வரல. எத்தனையோ கோடிகளை சம்பாதிக்கிறோம். அதில் ஒரு பகுதியைப் பிரிச்சிக் கொடுக்கணும். அறக்கட்டளைங்கற பேருல அவங்கக்கிட்டயும் காசு வாங்கறது. இதெல்லாம் ஒண்ணும் புரியல. நல்லா செய்யுங்க. நாளைக்கு ஆட்சியில சேர்ல இருந்து செய்யக்கூடிய விஷயத்தை இப்பவே ஷேர் பண்ண ஆரம்பிச்சிட்டாரு.

அந்த வகையில் தமிழ் சினிமா உலகிலேயே இன்று 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர் இவர் தான். பணத்தின் மேல் ஆசை இருந்தால் இவர் அரசியலுக்கு வர மாட்டார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசையில் தான் அரசியலில் தைரியமாக களம் காணப்போவதாக அறிவித்துள்ளார்.

இவர் இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்தாலும் கட்டாயமாக அரசியலில் குதிக்க மாட்டார்கள். இதுவரை அரசியலுக்கு வந்த நடிகர்கள் எல்லாம் பீல்டு அவுட் அல்லது வயதானவர்கள் தான். அந்த வகையில் இளம் சிங்கமாய், புயலென புறப்பட்டு வருகிறார் தளபதி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.