சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போறாரா?.. அப்போ சூர்யா படம் அவ்ளோதானா?

தமிழ் சினிமாவில் ஹிட் கொடுக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வரும் நிலையில் முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார் சுதா கொங்கரா. சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு…

sk sudha

தமிழ் சினிமாவில் ஹிட் கொடுக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வரும் நிலையில் முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார் சுதா கொங்கரா. சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்:

இயக்குநர் மற்றும் எழுத்தாளரான சுதா கொங்கரா மணிரத்னத்திடம் இணை இயக்குநராக பணியாற்றிவந்தார். மேலும், துரோகி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மாதவன் மற்றும் ரித்திகா சிங்கை வைத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கியிருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு திரையுலகில் பிரபலமானார். அப்படத்திற்காக தேசிய விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளை வாங்கி குவித்தார். புத்தம் புது காலை, பாவ கதைகள் என பல சூப்பர் ஹிட் ஆந்தாலஜி கதைகளை இயக்கியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் 43வது படமான புறநானூறு படத்தை சுதா கொங்கரா இயக்கி வரும் நிலையில் படப்பிடிப்பு சற்று தாமதாகும் என்பதை தெரிவித்திருந்தனர். மேலும், ரசிகர்களுக்கு சிறந்த படமாய் வழங்க பணியாற்றி வருவதாகவும், விரைவில் திரைக்கு வரும் என்று கூறியுள்ளார்.

சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், சூர்யாவின் படம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெளியேருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். மேலும், சூரரை போற்று படத்தை இந்தி ரீமேக்காக அக்‌ஷய் குமாரை வைத்து சர்ஃபிரா என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழில் சூரரைப்போற்று படத்தின் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்ப்பார்பு அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் அயலான் படத்தை தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உண்மை சம்பவங்களுடன் உருவாக்கியிருப்பதால் ரசிகர்கள் வெகு எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சுதா கொங்கரா அடுத்ததாக பல பிரபலங்களை வைத்து பட இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை சந்தித்து கதை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் சுதா கொங்கராவுடன் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.