உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும் பணிபுரிந்து பின் முழுநேர நடிகரானவர் ராமராஜன். 1989 ஆம் ஆண்டு இவர் நடித்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
கரகாட்டக்காரன் திரைப்படம் வாயிலாக பட்டி தொட்டியெங்கும் ராமராஜனும், அப்படத்தின் நாயகியான கனகாவும் புகழடைந்தனர். 80களின் இறுதியில் உட்சபட்ச பிரபலமாக இருந்தார் ராமராஜன். அடுத்தடுத்து ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘எங்க ஊரு காவல்காரன்’ போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்து கிராமத்து நாயகனாக வளம் வந்தார் ராமராஜன்.
மறுபுறம் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் வாயிலாக அறிமுகமானவர் கனகா. இவர் பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகளாவார். முதல் படத்தின் வாயிலாக மிக பிரபலம் ஆனவர் கனகா. ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மம்முட்டி, ஜெயராம், மோகன்லால் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கனகா.
‘அதிசய பிறவி’, ‘கும்பக்கரை தங்கையா’, ‘கோயில் காளை’, ‘சக்திவேல்’, ‘ஜல்லிக்கட்டு காளை’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘சிம்மராசி’ போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். கனகாவிற்கு சினிமாவில் நல்லதொரு எதிர்காலம் இருக்கும் என அனைவரும் நம்பிய வேளையில் நடுவில் சினிமாவை விட்டு விலகி காணாமல் போய் விட்டார். அவர் இருக்கிறாரா இறந்துவிட்டாரா என பலரும் தேடிய நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடியோவில் பேசி வெளியிட்டார்.
பேரழகியாக இருந்த கனகா அந்த வீடியோவில் உடல் பருமனாகி அடையாளமே தெரியாமல் இருந்தார். அந்த விடீயோவைப் பார்த்த பலர் கனகாவை பார்த்து பரிதாபப்பட்டனர். தற்போது ஒரு நேர்காணலில் ராமராஜன் அவர்கள் கனகாவைப் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், கனகாவிற்கு எல்லாமே அவர் அம்மாதான். அவர் அம்மா இறந்த பிறகு தான் கனகா இப்படி ஆகி விட்டார், ஆனாலும் கனகாவிற்கு இந்த நிலைமை வந்திருக்கக் கூடாது என்று வருத்தத்துடன் பேசியுள்ளார் ராமராஜன்.