PT சார் விமர்சனம்.. ஹிப் ஹாப் ஆதிக்கு இந்த முறையாவது ஹிட் கிடைக்குமா?.. படம் எப்படி?

’பிளாக் ஷீப்’ யூடியூப் சேனல் பிரபலம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மிரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், தியாகராஜன், பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், இளவரசு, பட்டிமன்ற ராஜா மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலர்…

pt sir

’பிளாக் ஷீப்’ யூடியூப் சேனல் பிரபலம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மிரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், தியாகராஜன், பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், இளவரசு, பட்டிமன்ற ராஜா மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியான PT சார் படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.

PT சார் விமர்சனம்:

மீசைய முறுக்கு படத்தின் மூலம் இசையமைப்பாளரில் இருந்து ஹீரோவாக விஜய் ஆண்டனி போலவே மாறியவர் ஆதி. முதல் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், வரிசையாக அவர் நடித்த பல படங்கள் பெரிதாக ஓடவில்லை.

ஆனாலும் தொடர்ந்து எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற உறுதியுடன் தொடர்ந்து போராடிவரும் ஹிப்ஹாப் ஆதி “ நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் நடித்துள்ள படம்தான் இந்த PT சார்.

பெரிதாக பிரச்சினைகளுக்கு எதுக்குமே போகக்கூடாது என்றும் தான் உண்டு தன் வேலை உண்டு என தியாகராஜன் நடத்தி வரும் பள்ளியில் PT சாராக பணியாற்றி வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. அவர் தங்கையாக நினைத்து பழகி வரும் அனிகா சுரேந்திரனுக்கு ஏற்படும் ஈடு கட்ட முடியாத பிரச்சனை காரணமாக புலியாக ஹிப்ஹாப் ஆதி மாறி அனிதாவுக்கு நடந்த கொடுமைக்கு நீதி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை.

காமெடி, ரொமான்ஸ், பாடல்கள் என முதல் பாதி ஜாலியாக நகர இடைவேளைக்கு முன்பாக அனிகா சுரேந்திரன் உயிரிழக்கிறார். அதன் பின்னர் கதைக்குள் வரும் திரைப்படம் இரண்டாம் பாதியில் கோர்ட் டிராமாவாக மாறுகிறது. பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த படம் வலுவாக பேசுகிறது.

கதையில் உள்ள ஆழம் திரைக்கதையில் தெளிவாக இல்லாத காரணத்தினால் படத்தின் சுவாரசியம் பல இடங்களில் படுத்து விடுகிறது. அதுவே இந்த பழத்துக்கு பெரிய குறையாக மாறியுள்ளது. விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் ஆதி தொடர்ந்து நடித்து வந்தாலும் அவர்கள் படங்களை ரசிகர்கள் பெருமளவில் விரும்பி பார்ப்பதில்லை. இந்த படமும் அந்த வரிசையில் இணைந்து விடும் என்று தான் தெரிகிறது.