விஜய் கூறிய ஒற்றை வார்த்தைக்காக ஜில்லா படத்தில் நடித்தேன்… மோகன்லால் பகிர்வு…

By Meena

Published:

மலையாள முன்னணி நடிகரான மோகன்லால் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் மலையாளம், தமிழ், கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமா துறையில் முக்கியமான ஒருவராக பார்க்கப்படும் மோகன்லால் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு தனது 20 வது வயதில் ‘மஞ்சில் விரிச்சா பூக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார். தொடர்ந்து நெகட்டிவ் ரோலில் நடித்து, பிறகு பல வெற்றிப் படங்களில் துணை நடிகராக நடித்தப் பின்னர் 1986 ஆம் ஆண்டு ‘ராஜாவிண்டே மகன்’ திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக ஆனார்.

மோகன்லால் அவர்கள் தமிழில் இருவர் (1997), உன்னைப் போல ஒருவன் (2009), ஜில்லா (2014), நமது (2016), புலி முருகன் (2017), காப்பான் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது கம்பீரமான தோற்றத்திற்காகவும் அபாரமான நடிப்பிற்காகவும் ரசிகர் பட்டாளத்தைப் கொண்டவர்.

மோகன்லால் அவர்கள் ஐந்து தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். அவை இரண்டு சிறந்த நடிகர் , ஒரு சிறப்பான நடிப்புக்கான சிறப்பு ஜூரி விருது , மேலும் சிறந்த திரைப்படத்திற்கான விருது (தயாரிப்பாளராக), மேலும் ஒன்பது கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் தென் மற்றும் பல விருதுகள். . 2010 இல் ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்திடமிருந்தும் 2018 இல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்திடமிருந்தும் கௌரவ முனைவர் பட்டங்களைப் பெற்றவர்.

இந்நிலையில், தற்போது மோகன்லால் அவர்கள் மலையாள பிக் பாஸ் சீசன் 6ஐ தொகுத்து வழங்கி வருகிறார். அதில் தமிழ் விஜய் அவர்களுடன் இணைத்து ‘ஜில்லா’ திரைப்படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால், ஜில்லா படத்தில் ‘சிவன் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என அவரே என்னை போன் செய்து அழைத்தார். அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார். அவர் கூறிய அந்த வார்த்தைக்காக அவரது அழைப்பை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டு ‘ஜில்லா’ திரைப்படத்தில் நடித்தேன் என்று பகிர்ந்துள்ளார் மோகன்லால்.