சினிமாவில் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக நடித்து ஊதித் தள்ளுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். புராணக் கதைகளாக இருக்கட்டும், தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றுப் படங்களாக இருக்கட்டும் அந்தக் கேரக்டரில் அப்படியே பொருந்துபவர் நடிகர் திலகம். இன்றும் கர்ணன், வீரபாண்டி கட்டபொம்மன், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன், திருவருட்செல்வர், திரிசூலம், தெய்வமகன் போன்ற படங்களைப் பார்த்தால் அப்பாடி மனுஷன் என்னம்மா நடிச்சிருக்காரு.. என்று வியப்புடன் கேட்கத் தோன்றும். மேலும் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுக்கே தனது நடிப்பால் உயிர்கொடுத்து அவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று உணர வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
நடிகர் திலகம் நடித்த எத்தனையோ படங்களில் 1993-ல் வெளியான படம் தான் பாரம்பரியம். மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா இயக்கிய இத்திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு சிவாஜியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் நடித்த போது மனோபாலா நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஒரு சீன் ஒன்றைக் குறிப்பிட்டு நீங்கள் நடந்து வரும்போது உங்கள் அங்கவஸ்திரம் கீழே விழ வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அந்தக் காட்சிக்கு தேவையானபடி கேமராவை செட் செய்து, அங்கவஸ்திரம் கீழே விழும் போது அங்கும் ஒரு பேபிகேமிராவை செட் செய்திருந்தார். இப்போது காட்சி தயாராகிறது. மனோபாலா ஆக்சன் என்று சொல்ல நடிகர் திலகம் கம்பீரமாக நடந்து வரும் போது அவர்சொன்ன இடத்தில் தானாக அங்கவஸ்திரம் விழுகிறது. மனோபாலாவிற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
ஆர்.ஜே. to 6 லட்சம் சம்பளம்.. சுந்தர் சி. கொடுத்த தைரியத்தால் ஆர்.ஜே.பாலாஜி சாதித்த கதை
எப்படி இது சாத்தியம். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சொன்ன இடத்தில் அங்கவஸ்திரத்தை விழ வைக்க முடியாது. நடிகர் திலகத்துக்கு இது எப்படி சாத்தியம் என்று விழிக்க, அவரிடமே கேட்டு விடலாம் என எண்ணி கேட்டுள்ளார்.
அப்போது நடிகர் திலகம் மனோபாலாவைப் பார்த்து, “இது ரொம்ப சிம்பிள்டா.. நான்தான் கையை வைத்து கீழே இழுத்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். இது படத்தில் தெரியாத என்று கேட்கும்போது, “நான் நடிக்க வரும் போது கேமராமேனிடம் எந்த லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது என்று கேட்பேன். குளோசப் காட்சியா? அல்லது பாதி பிரேம் ஆ..? அல்லது முழுவதுமாக தெரிவேனா என்று கேட்டுக் கொண்டு அவர் சொல்வதற்கேற்ப என்னுடைய நடிப்பு இருக்கும். காட்சிக்கு பாதி பிரேம் மட்டும் தேவைப்பட்டது எனவே அந்த அளவிற்கு மட்டும் நடித்து விட்டு கீழே கையை வைத்து அங்கவஸ்திரத்தை இழுத்து விட்டேன்” என்று நடிகர் திலகம் கூறியிருக்கிறார்.
மனோபாலாவிற்கு ஆச்சர்யம் தாங்க வில்லை. இதேபோலத்தான் அழும் காட்சிகளிலும் ஷாட் எடுக்கப்போகும் முன்பாக கிளிசரின் கண்களில் போட்டுக்கொண்டு அப்படியே மூடி இருப்பாராம். ஆக்சன் என்று சொன்னதும் கண்களில் ஓரங்களில் லேசாக இமைக்க கண்ணீர் தானாகக் கொட்டுமாம் இப்படித்தான் நடிகர் திலகம் தனது நடிப்பு ரகசியங்களை மனோபாலாவிடம் கூறியிருக்கிறார்.
இவ்வாறு ஒரு டெக்னிகல் ரீதியாக காட்சிப்படி எந்த அளவு தேவையோ அந்த அளவிற்கு மட்டும் இயல்பாக நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை அசால்ட்டாக வெளிக்காட்டியிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.