எனக்கு 62 வயசு ஆகிருச்சு… நான் இப்படி இருக்கிறதுக்கான ரகசியம் இதுதான்… மொட்டை ராஜேந்திரன் பகிர்வு…

By Meena

Published:

ஸ்டண்ட் டபுளாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் மொட்டை ராஜேந்திரன். நூற்றுக்கணக்கான படங்களில் ஸ்டண்ட் டபுளாக பணியாற்றிய மொட்டை ராஜேந்திரன் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘பிதாமகன்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். 2010 ஆம் ஆண்டு ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் வில்லத்தனமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தது அனைவரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது.

அதனால் நகைச்சுவை கதாபாத்திரத்திலே நடிக்க தொடங்கினார் மொட்டை ராஜேந்திரன். ‘மிளகா’ திரைப்படத்தில் வில்லனாக இவரது நடிப்பு அனைவரின் பாராட்டைப் பெற்றது. இவரது மொட்டை தலைக்கும், தனித்துவமான குரலுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்ந்து ‘பட்டத்து யானை’, ‘ராஜா ராணி’, ‘சீமராஜா’, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நானும் ரவுடிதான்’, ‘கோலமாவு கோகிலா’, ‘தில்லுக்கு துட்டு 2’, ‘எம். ஜி. ஆர் மகன்’, டிடி ரிட்டர்ன்ஸ்’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் மொட்டை ராஜேந்திரன்.

இந்நிலையில், தற்போது இந்த வயதிலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைப்பது பற்றிய ரகிசியத்தை பகிர்ந்துள்ளார் மொட்டை ராஜேந்திரன். அவர் கூறியது என்னவென்றால், எனக்கு 62 வயசு ஆச்சு. சாப்பாட்டில் எந்தக் கட்டுப்பாடும் பண்ண மாட்டேன், என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன். வீட்டில் எதுவும் இல்லை அப்படினாலும் தயிர், ஊறுகாய் வாங்கி சாதம் கூட வைத்து சாப்பிடுவேன். ஆனால் தினமும் தவறாமல் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன் என்று கூறியுள்ளார் மொட்டை ராஜேந்திரன்.