சூப்பர்ஸ்டார்னா அப்படி பண்ணலாமா.. ரஜினி எடுத்த முடிவால் முதல் முறையாக கோபப்பட்ட கிரேசி மோகன்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான எழுத்தாளர்களை பட்டியல் போட்டால் நிச்சயம் அதில் கிரேசி மோகனுக்கு பெரிய பங்கு உண்டு. ஆரம்ப காலகட்டத்தில் நாடகத்தின் மூலம் அறிமுகமாகி இருந்த கிரேசி மோகன் ஒரு பக்கம் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் கதை திரைக்கதை எழுதுவதிலும் வல்லவராக இருந்தார்.

அதிலும் காமெடி கதைகளை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்டாக இருந்து வந்த கிரேசி மோகன் கமல்ஹாசனின் மூலம் திரைப்படத்திலும் அறிமுகமானார். கமலுடன் ஏராளமான திரைப்படங்களில் நடிகராகவும், கதை எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ள கிரேசி மோகன் மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், அவ்வை சண்முகி, சதிலீலாவதி என எக்கச்சக்க திரைப்படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

கமல் படங்களுக்கு மட்டும் இல்லாமல் ஆஹா, ரட்சகன், அருணாச்சலம் என ஏராளமான திரைப்படங்களிலும் கதை, வசனம் எழுதியுள்ள கிரேசி மோகன் கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மறைந்தார். காமெடி கதாபாத்திரங்கள் மற்றும் வசனங்கள் எழுதுவதில் வல்லவரான கிரேசி மோகனின் படைப்புகள் பல தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் கூட அதனை பெரிய அளவில் ரசித்து பார்ப்பார்கள்.

பஞ்ச தந்திரம், சதிலீலாவதி என பல படங்களை இந்த லிஸ்டில் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கிடையே, ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அருணாச்சலம் என்ற திரைப்படத்தில் பணியாற்றி இருந்தார் கிரேசி மோகன். அந்த சமயத்தில் ரஜினி எடுத்த முடிவின் காரணமாக கிரேசி மோகன் கோபப்பட்டது பற்றி படத்தின் இயக்குனரான சுந்தர். சி சில விஷயங்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் கிரேசி மோகன். கோயம்பத்தூரில் இருக்கும் போது அவரது நாடகங்கள் போட்டால் முதல் ஆளாக சென்று பார்த்து விடுவேன். அந்த அளவுக்கு பெரிய ரசிகன் நான். அவருடன் அருணாச்சலம் படத்தின் கதையை விவாதித்த போது முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட வகையில் தான் திட்டம் போட்டிருந்தோம்.

அது ரஜினி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதும் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. இதனால், 2 மாதங்கள் நாங்கள் கதையை ஆலோசித்து தயார் செய்திருந்தோம். அந்த சமயத்தில் ரஜினிகாந்திற்கு சில தனிப்பட்ட நெருக்கடிகள் இருந்ததால் படத்தில் நடிப்பதை கொஞ்ச நாட்களுக்கு தள்ளி போடலாம் என்றும் முடிவு செய்திருந்தார்.

அப்போது, என்னையும் கிரேசி மோகனையும் அழைத்த ரஜினி சார், ‘இப்போதைக்கு படம் செய்யும் ஐடியா இல்ல. கொஞ்ச நாள் போகட்டும்’ எனக்கூறி விட்டார். அங்கிருந்து கிளம்பி வந்த பிறகு, முதல் முறையாக கிரேசி மோகன் சார் கோபப்பட்டு நான் பார்த்தேன். ‘2 மாசமா பேசிட்டு சட்டுனு படம் பண்ணலன்னு சொல்லிட்டாரு. என்ன தான் நெனச்சிட்டு இருக்காரு’ என ரஜினி மீது கடும் கோபத்தில் கிரேசி மோகன் அப்போது பேச ஆரம்பித்து விட்டார்” என சுந்தர். சி கூறியுள்ளார்.