சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்ப்பதுண்டு. அவரது வெள்ளந்தியான சிரிப்பும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிக்கும் அவரது தனித்துவமும் அவரை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. அதனால் தான் தற்போது கமல், ரஜினி என பல பெரிய நடிகர்களுடன் கைகோர்த்து வருகிறார்.
டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து திரையுலகில் தனது தனித்திறமையால் நுழைந்து முன்னுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மாவீரன், ரஜினி முருகன், காக்கி சட்டை, மான் கராத்தே என பல படங்களில் நடித்து ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர்.
இவர் கடைசியாக குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் வகையில் நடித்த படம் அயலான். தொடர்ந்து இவர் தனது படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதால் பலராலும் கவனிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கமலின் சொந்த தயாரிப்பில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அடுத்து ரஜினி படத்திலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் சித்ரா லட்சுமணனிடம் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜ் அடுத்து சிவகார்த்திகேயன் வைத்து படம் இயக்க வாய்ப்புள்ளது. சிவகார்த்திகேயன் விஜய் மீது அபிமானம் கொண்டவர். வெங்கட்பிரபு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கோட் படம் தற்போது விஜய் நடிப்பில் வருகிறது. கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கப் போறாங்க.
தமிழ்சினிமாவில் சிங்கம்னு சூர்யாவைத் தான் சொல்றாங்க. ஆனா சமீபகாலமாக அவரை ரோலக்ஸ்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு சீன்ல தான் நடிச்சோம். ரோலக்ஸ்னு கூப்பிடுறாங்களேன்னு அவரே நினைக்கலாம். ஆனா அந்தக் கேரக்டரோட டெப்த் தான் அப்படி பேச வைக்குது. அந்த மாதிரி ஒரு கேரக்டர் கிடைச்சா சிவகார்த்திகேயன் நடிக்கலாம்.
சிவகார்த்திகேயனின் மற்றொரு அபிமான நடிகர் சூப்பர்ஸ்டார். அவருடன் இணைந்து லோகேஷ் கனகராஜின் நடிப்பில் நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இணை நாயகனாக நடிக்க உள்ளாராம். இதை ரஜினியே உறுதிப்படுத்திவிட்டாராம்.
ஆனால் அதற்கு முன்பே லோகேஷ் கனகராஜின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். விஜய் பட இயக்குனர்களிடம் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் சிவகார்த்திகேயன். ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட்பிரபு அடுத்து லோகேஷ் கனகராஜ். அதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வரும் காலங்களில் உச்சத்தைத் தொடுவது நிச்சயம.