இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்து பின்னர் ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் டைரக்டர் ஷங்கர். ஜென்டில் மேன் கதையை தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் சொல்லச் சென்ற போது அவரிடம் நல்ல பைக் கூட கிடையாது. ஆனால் ஜென்டில்மேன் வெற்றிக்குப் பிறகு அவர் அடைந்த உச்சத்தைக் கண்டு இந்திய சினிமா உலகமே வாயடைத்துப் போனது.
ஜென்டில்மேன் படத்திற்காக ஷங்கர் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க வைக்க அணுகியது கமல்ஹாசனைத் தான். ஆனால் அப்போது அவர் நிராகரிக்க, பின் சரத்குமார் பேசியுள்ளார் அவரும் ஒத்து வராத நிலையில் இறுதியாக அர்ஜுனிடம் சென்றுள்ளார்.
அர்ஜுனும் கதை நன்றாக இருந்தாலும் அப்போது அவருக்கு சேவகன் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. படமும் ஹிட்டாகி ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் அர்ஜுன். எனவே அதற்கு முன் எனக்கு வாய்ப்புக் கொடுக்காதவர்கள் சேவகன் படம் ஹிட் ஆனதும் வரிசையாக வந்து கதை சொல்கின்றனர். நடிக்க அழைக்கின்றனர். எனவே எந்த இயக்குநர் கதையிலும் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து வைத்தருந்தார். தானே இனி படங்கள் இயக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்க, ஜென்டில்மேன் கதை அவரை மாற்றி யோசிக்க வைத்தது.
அதன்பின் ஜென்டில் மேன் படத்தில் நடிக்க படம் வெளியாகி ஆரம்பத்தில் சில நாட்கள் சுமாரா ஓடியது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் படத்தின் பாடல்களை பணம் கொடுத்து ஒளிபரப்ப அந்தப் பாடல்களைக் கேட்ட மக்கள் திரையரங்கிற்கு படையெடுக்கத் தொடங்கினர்.
இப்படியாகத்தான் திரைக்கு மக்களை வரவழைக்க அதன்பின் நல்ல கதையம்சம் காரணமாக படம் சூப்பர்ஹிட் ஆகி அர்ஜுனுக்கும், ஷங்கருக்கும் திருப்புமுனையைக் கொடுத்தது. அதன்பின் மீண்டும் கே.டி.குஞ்சுமோன் – ஷங்கர் கூட்டணி மீண்டும் காதலன் படத்தில் இணைந்து பிளாக் பஸ்டர் வெற்றியைக் கொடுத்தது. இரண்டு படங்களிலுமே ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை சேர்த்தது. ஷங்கரும் இதன்பின் பிரம்மாண்ட இயக்குநர் பட்டியலில் சேர்ந்தார். அதன்பின் இந்தியன் படம் அவரை இந்தியா முழுவதும் அறிய வைத்தது.