தமிழ்த் திரையுலகில் தற்போது வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் ஜொலித்து வருபவர் போஸ் வெங்கட். சன்டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் காவேரிக்கு ஜோடியாக போஸ் என்ற கதபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த வெங்கட் பின்னாளில் அந்தக் கதாபாத்திரத்தின் பெயரையே தனது பெயருக்கு முன்னால் சேர்த்து போஸ் வெங்கட் என்று ரசிகர்களாலும், சினிமா உலகிலும் அறியப்பட்டார்.
நடிகர் போஸ் வெங்கட் சினிமாவிலும், சீரியலிலும் நுழைவதற்கு முன்னதாக ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். எனினும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் நுழைந்தார். முதன் முதலாக மெட்டி ஒலி ஆடிஷனில் கலந்து கொண்ட போது தற்போது சீரியல் இயக்குநராக இருக்கும் திருச்செல்வம் மெட்டி ஒலி சீரியலில் இயக்குநர் திருமுருகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
அப்போது போஸ்வெங்கட் மெட்டி ஒலி சீரியலில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெறுவதை அறிந்து சென்றிருக்கிறார். அப்போது பலரிடம் போட்டோவை மட்டும் வாங்கி வைத்துக் கொண்ட திருச்செல்வம் போஸ் வெங்கட்டிடமும் அதேபோன்று போட்டோ மட்டும் வாங்கி வைக்க அவர் நடித்தும் காட்டியிருக்கிறார். அப்படிக் கிடைத்ததுதான் மெட்டி ஒலி போஸ் கதாபாத்திரம்.
தொடர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின் சினிமாவில் நுழைந்தார். சிவாஜி படத்தில் வில்லனாக சுமனுக்கு உதவியாளராக நடித்து கவனம் பெற்றவர், இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கிய கவன் படத்தில் மெயின் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றார். தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் போஸ் வெங்கட்டுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.
ரஜினிக்கு நடிப்பு சொல்லத் தந்த குருதான் போஸ் வெங்கட்டுக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறார். மேலும் அவர் நடிப்பதற்கு முன் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளார். ஒருமுறை ரஜினியைச் சந்தித்து போஸ் வெங்கட் கூற நான் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளேன் என்று கூற, ரஜினியும் பதிலுக்கு அப்போ நீங்களும் காக்கிச் சட்டை, நானும் காக்கிச் சட்டை என்று கூறியிருக்கிறார். மேலும் சிவாஜி படத்தில் ரஜினியுடன் நிறைய காட்சிகளில் வந்து செல்வார்.
மெட்டி ஒலி சீரியலில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த போஸ் வெங்கட் பயணம் அந்த சீரியலின் இறுதியில் 1000 ரூபாயாக வந்தது. அதற்குப் பின் சினிமாக்களில் நடித்து இன்று லட்சங்களில் சம்பளமாக பெறுகிறார்.