தீனாவுக்கு முன்னால ஏ.ஆர். முருகதாஸ் செதுக்கிய கதை.. இன்றும் கிடப்பில் போடப்பட்டிருக்கும் மர்மம்

By John A

Published:

புரட்சிக்கலைஞர் விஜயகாந்தினை ரமணா என்ற திரைப்படம் மூலம் அவரின் மற்றொரு பரிமாண நடிப்பினை வெளிக்கொணர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது ஜனரஞ்சக திரைப்பட அனுபவத்தினைக் கொடுத்தவர்தான் ஏ.ஆர். முருகதாஸ். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவிடம் குஷி, வாலி போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்னர் தனது முதல் இயக்குர் கனவை 2001-ல் தீனா படத்தின் மூலம் நனவாக்கினார்.

தீனா படம் அஜீத்தை முற்றிலும் ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படமாகும். மேலும் தல என்ற பெயரும் இந்தப் படத்திலிருந்தே அஜீத்தினை ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர். எப்போதுமே புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் அஜீத் தீனா படம் மூலம் ஏ.ஆர். முருகதாஸை இயக்குநர் சேரில் அமர வைக்க, அந்தப் படம் ஹிட்டானது.

அதனைத் தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, சர்கார், கத்தி, தர்பார் என மாஸ் ஹிட் படங்களைக் கொடுத்து இன்று இந்திய சினிமாவின் முன்னனி இயக்குநராகத் திகழ்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தியிலும் படங்கள் இயக்கி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வரும் முருகதாஸ் தீனா படத்திற்கு முன்னதாக ஓர் விலங்குப் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருந்தாராம்.

தீனா படத்தினை கதையை அஜீத்தை மனதில் வைத்து எழுதி, பின் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் கதை சொல்ல அவரும் தயாரிக்க முன்வந்துள்ளார். ஆனால் அப்போது அஜீத் சிட்டிசன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் வேறு நடிகரை வைக்கலாம் என சக்கரவர்த்தி கூற முருகதாஸ் அஜீத் தான் இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தாராம்.

ஒரே பாடலுக்காகவே திரும்ப திரும்ப தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்.. படத்தில் மூன்று முறை இடம்பெற்று வாகை சூடிய ஓ போடு..

மேலும் வேறுகதை ஒன்றை சக்கரவர்த்தியிடம் கூறியிருக்கிறார். அதாவது ஒரு குரங்கினை மையமாக வைத்து ஜங்கிள் புக் போன்று கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார். மேலும் வேறு சில தயாரிப்பாளர்களிடம் சொல்ல அனைவரும் அருமையான கதையாக இருக்கிறது என்று எண்ணி படத்தின் அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிக்கலாம் என எண்ணும் போது புளுகிராஸ் அமைப்பின் பயங்கர கெடுபிடிகளால் அப்போது அது முடியாமல் இருந்தது. மேலும் பிரபல ஹாலிவுட் படங்களுக்கு அனிமேஷன் செய்யும் நிறுவனத்திடம் கதையைச் சொல்ல அவர்களும் சம்மதித்துள்ளனர். எனவே ஏ.ஆர்.முருகதாஸின் கனவுப் படம் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு அவ்வப்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.