மொஹிதீன் அப்துல் காதர் என்ற இயற்பெயரைக் கொண்ட ராஜ்கிரண் அவர்கள் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். பல புதுமுக நடிகர்களை குறிப்பாக இன்று முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு அவர்களை ராஜ்கிரண் அவர்கள் தான் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1989 ஆம் ஆண்டு ‘என்ன பெத்த ராசா’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஜ்கிரண். அதைத் தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’, ‘அரண்மனை கிளி’, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பாண்டவர் பூமி’, ‘கோவில்’, ‘சண்டக்கோழி’, ‘வேங்கை’, ‘பா பாண்டி’, ‘ரஜினி முருகன்’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர்.
இவர் கறிக்குழம்பை எலும்பை கடித்து சாப்பிடும் ஸ்டைலுக்காக ரசிகர்களைப் பெற்றவர். செண்டிமெண்ட் காட்சிகள் என்றாலும் சரி, கண் சிவக்கும் கோவமான முக பாவனையிலும் சரி தனது அபாரமான நடிப்பினால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். தலைக்கனம் இல்லாத எளிய மனிதர் ராஜ்கிரண் அவர்கள்.
ராஜ்கிரண் அவர்கள் கதீஜா நாச்சியார் என்பவரை மணந்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் தத்தெடுப்பில் ஒரு மகளும் உள்ளனர். இவர்களது மகளின் காதல் திருமணம் கூட கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கி பேசுபொருள் ஆனது.
தற்போது நடந்த நேர்காணல் ஒன்றில் மனைவியுடன் கலந்துக் கொண்ட ராஜ்கிரண் அவர்களிடம் மனைவியை பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள். அதற்கு பதிலளித்த ராஜ்கிரண் அவர்கள், அந்த காலத்திலேயே தமிழகத்தில் 1 கோடி ருபாய் சம்பளம் வாங்கியவன் நான் தான். அதை கூட இருந்தவர்களே சுருட்டிக் கொண்டு போய் செட்டில் ஆகி விட்டார்கள். நான் ஒன்றும் இல்லாமல் நிற்கதியாய் நின்றேன்.
அப்போது என்னை ஆதரித்தவர் என் மனைவி கதீஜா நாச்சியார் தான். அன்று முதல் இன்று வரை என் எல்லா துன்பங்களிலும் பங்கெடுத்து கொண்டவர், நாங்கள் இருவரும் ஒரு உயிர் தான் வேறு வேறு அல்ல என்று எமோஷனலாக பகிர்ந்துக்கொண்டார் ராஜ்கிரண்.