ஹன்சிகா, ஆண்ட்ரியா, திரிஷா, ராஷி கன்னா என பல அழகழகான நடிகைகளை இறக்கி அரண்மனை படங்களை எடுத்து வந்த சுந்தர் சிக்கு இதுவரை கிடைக்காத அளவுக்கு ஒரு வரவேற்பு கடைசியாக 4ம் பாகத்தில் தமன்னாவை அவர் இறக்கியதும் கிடைத்திருக்கிறது.
அரண்மனை 4 வசூல்:
கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கே விசிட்டிங் கார்டாக தமன்னாவின் காவாலா பாடல் அமைந்தது. நெல்சன் முதன் முதலில் அந்த பாடலுக்குத்தான் புரமோ வீடியோவையே வெளியிட்டு அதுவரை படத்துக்கு இல்லாத ஹைப்பை அனிருத் மற்றும் தமன்னா மூலம் ஏற்படுத்தினார். இந்நிலையில், அதே போல சுந்தர் சி சரியாக தனது வெற்றிக்கு தமன்னாவை பயன்படுத்திக் கொண்டார்.
தமன்னா நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் வெற்றியடைந்து வருகின்றன. தமன்னாவுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் அதிக அளவில் கிடைத்து வருகின்றனர். சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம் ஹிந்தியில் வெளியானாலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 10 ஆம் தேதி கவின் நடித்துள்ள ஸ்டார் படம் வெளியாகி தான் தமிழ் சினிமாவை பாக்ஸ் ஆபிஸில் தலைநகர செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொஞ்சம் பொறு கவினே என கவின் சுந்தர் சி முந்திக்கொண்டு மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.
முதல் மூன்று நாட்களிலேயே 20 கோடி ரூபாய் வசூலை அரண்மனை 4 திரைப்படம் நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரண்மனை 4 திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிய நிலையில் 19 முதல் 20 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லால் சலாம் வசூலை 3 நாளில் முந்தியது:
ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடித்து இந்த ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தின் லைஃப் டைம் வசூலான 16 கோடி ரூபாய் வசூலை மூன்று நாட்களில் முடித்து விட்டதாக விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
கில்லி ரீ ரிலீஸ் வசூலான 25 கோடி ரூபாயை இன்று அல்லது நாளை அரண்மனை 4 கடக்கும் என பார்க்கப்படுகிறது. 100 கோடி வசூலை அரண்மனை 4 திரைப்படம் தொடுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அரண்மனை 4 வெற்றியால் சுந்தர் சி கம்பேக் கொடுத்துள்ள நிலையில், அடுத்து கலகலப்பு 3 மற்றும் அரண்மனை 5 பாகங்களை விரைவில் எடுத்து வெளியிடுவார் என தெரிகிறது.
நடிகை தமன்னாவுக்கும் இந்த படத்தின் வெற்றி மூலம் அடுத்தடுத்து தமிழில் பல பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை 4 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகளில் அவர் நடித்துள்ள அந்த நடிப்பு தான் என பலரும் பாராட்டி வருகின்றனர்.