சந்தனம் 2001 முதல் 2004 வரை விஜய் டிவியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் 2004 ஆம் ஆண்டு சிம்பு நடித்த மன்மதன் திரைப்படம் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றித் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். இவரின் டைமிங் பஞ்ச் டயலாக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 2008 ஆம் ஆண்டு ‘அறை எண் 305- இல் கடவுள்’ என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றினார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமானார்.
அதற்குப் பின்பு நாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹீரோ கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதில் இவர் நடித்த தில்லுக்கு துட்டு என்ற 2 பாகங்கள் கொண்ட திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று சந்தானத்திற்கு ஹீரோ அந்தஸ்தும் கிடைத்தது.
தற்போது ‘இங்க நான்தான் கிங்கு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அந்த படத்தின் பிரஸ் மீட் நடந்தது. அதில் சந்தானம் பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், இந்த திரைப்படம் மக்கள் பார்த்து வயிறு குலுங்க சிரித்து என்ஜாய் பண்ணும் விதமாக இருக்கும், கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.