ரவீனா தாஹா 2003 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தனது 4 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் இருந்ததால் நடனம் பயின்று நடன கலைஞர் ஆனார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
சின்னத்திரையில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மௌன ராகம் 2’ தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்புக் கிடைத்து ‘கதை சொல்லப் போறோம்’, ‘ராட்சசன்’, ‘அரக்கன்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் 2023 ஆம் ஆண்டு ‘பிக் பாஸ் சீசன் 7’ இல் போட்டியாளராக பங்கேற்றார். தனது கல கல சிரிப்பினால் ரசிகர்களை பெற்றவர்.
அதுமட்டுமல்லது தனது சிறு வயதிலேயே தனது அப்பா இறந்துவிட்டதால் தனது 14 வயது முதலே குடும்ப சூழ்நிலைக்காக நடனமாடி உழைக்க ஆரம்பித்தேன், நான் கஷ்டப்பட்டு உழைச்சு தான் என் அம்மாவையும் அண்ணனையும் பாத்துக்கிறேன் என்று இவரது சொந்த கதையை பிக் பாஸில் பகிர்ந்த பிறகு மக்கள் இவரை மேலும் விரும்பினர். 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி பின்னர் வெளியேற்றப்பட்டார்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ரவீனாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கு, பட வாய்ப்புகள் வந்ததா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ரவீனா, பிக் பாஸ்க்கு அப்புறம் எனக்கு படங்கள், ஆல்பம் பாடல்கள் போன்ற வாய்ப்புகள் வந்திட்டு தான் இருக்கு. எல்லாத்தையும் நாம எடுத்துக்க முடியாது, மக்களுக்கு எது பிடிக்கும், எதை ரசிப்பாங்க என்று யோசிச்சு தான் தேர்ந்தெடுக்கணும். அப்படி சிலவற்றை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறேன், அதற்கான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.