தளபதி விஜயும், விக்ரமும் சினிமாவுக்குள்ள நுழைந்து 10 வருஷம் கழித்துத் தான் இருவரின் படங்களும் மோதின. அவற்றில் எது வெற்றி பெற்றது? ஜெயித்தது யாருன்னு பார்ப்போமா….
2001ல் விக்ரமின் காசி, விஜயின் ஷாஜஹான் ரிலீஸ். இதுல விக்ரம் தான் வின்னர். 2002ல் விஜயின் தமிழன், விக்ரமின் ஜெமினி படங்கள் ரிலீஸ். இதுல விக்ரம் தான் வின்னர். ஓ போடு சாங் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. படம் 175 நாள் அதாவது வெள்ளிவிழா ஓடியது. அதே ஆண்டில் விஜய் யூத், விக்ரம் சாமுராய் படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர்.
2003 பொங்கலுக்கு விஜயின்; வசீகரா, விக்ரமின்; தூள் ரிலீஸ். இதுல விக்ரம் தான் வின்னர். 225 நாள் ஓடி வெற்றி பெற்றது. அதே ஆண்டில் விக்ரமின் சாமி, விஜய் நடித்த புதிய கீதை படங்கள் ரிலீஸ்;;;;;;;;;;;;;;;. புதிய கீதை. விக்ரம் தான் வின்னர். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் எல்லாம் சூப்பர். கல்யாணம் தான் கட்டிக்கிட்டு பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
2003 விஜயின் திருமலை, விக்ரம் பிதாமகன் விஜய் தான் வின்னர். இந்தப் படத்தில் தான் மாஸ் ஹீரோவானார் விஜய். விக்ரம் படமும் செம மாஸ். இதுல விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது.
2004ல் விஜய்க்கு கில்லி, விக்ரமுக்கு அருள் படமும் ரிலீஸ். விஜய் தான் வின்னர். 200 நாள்களுக்கும் மேல் ஓடியது. படத்தில் இடம்பெற்ற அப்படி போடு சாங் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. 2005ல் விஜய் சிவகாசி, விக்ரம் மஜா படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2011ல் விக்ரமுக்கு ராஜபாட்டை, விஜய் நண்பன் இதுல விஜய் தான் வின்னர். 2015 விஜய்க்கு புலி, விக்ரம் பத்து எண்றதுக்குள்ள இதுல ரெண்டும் பிளாப்.
1999 விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், விக்ரம், பார்த்திபன் நடித்த ஹவுஸ்புல் படமும் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். அதே ஆண்டில் விஜய் கண்ணுக்குள் நிலவு, விக்ரம் சேது இதுல விக்ரம் தான் வின்னர். விஜய் 25வது படம். ஆனாலும் சுமார் தான்.
1997 விஜய் லவ் டுடே, விக்ரம், அஜீத் உல்லாசம் இதுல விஜய் தான் வின்னர். 2001 விஜய் பத்ரி, விக்ரம் விண்ணுக்கும் மண்ணுக்கும் ரிலீஸ். இதுல ரெண்டும் வெற்றி. 1998 விஜய் நினைத்தேன் வந்தாய், விக்ரம் கண்களின் வார்த்கைள் இதுல விஜய் தான் வின்னர். 1992 விஜய் நாளைய தீர்ப்பு, விக்ரம் மீரா. இதுல ரெண்டும் பிளாப்.