சித்ரா பௌர்ணமி விழா: திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்து மற்றும் இரயில் வசதி ஏற்பாடு…

By Meena

Published:

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த வருடம் சித்ரா பௌர்ணமி ஏப்ரல் 23 ஆம் தேதி நிகழ்கிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது பிரசித்தி வாய்ந்தது. அன்று பராசக்தி அம்மன் பூம்பல்லக்கு வைபவமும் நடைபெறும்.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். லிங்கமே திருவண்ணாமலையில் மலையாக இருப்பதால் ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி அன்றும் பல்லாயிர கணக்கான மக்கள் கிரிவலம் செய்வார்கள்.

குறிப்பாக சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு திசையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செய்து அண்ணாமலையானை மனமுருகி வேண்டிச் செல்வர். அதற்காக அரசு பல வசதிகளை பக்தர்களுக்காக செய்து தரும்.

அந்த வகையில் இந்த சித்ரா பௌர்ணமிக்கு பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி, கழிவறை வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் கூடுதல் பேருந்து மற்றும் சிறப்பு இரயில் வசதியையும் அரசு செய்திருக்கிறது. சிறப்பு இரயிலின் நேரத்தை இனிக் காணலாம்.

எண் 06033 சென்னை கடற்கரை-வேலூர் கண்டோன்மென்ட்-திருவண்ணாமலை மெமு சிறப்பு ரயில், ஏப்ரல் 23ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

எண் 06034 திருவண்ணாமலை-வேலூர் கண்டோன்மென்ட் – சென்னை கடற்கரை மெமு சிறப்பு ரயில் திருவண்ணாமலையில் இருந்து ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.