தல தோனியை தெரியாதார் உலகில் உண்டோ என்பதைப் போல் அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. 1981 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி பிறந்த மகேந்திர சிங் தோனி முதல் முதலாக 1998 ஆண்டு பீகார் மாநில U- 19 அணியில் இடம் பிடித்து தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார்.
பின்னர் 1999 ஆம் ஆண்டு பீகார் அணிக்காக ரஞ்சிக் கோப்பை போட்டியில் பங்கேற்றார். சிறப்பாக விளையாடி 2000 ஆண்டில் முதல் சதத்தை அடித்தார். அதற்குப் பின்பு மூன்று ஆண்டுகள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார்.
அதன் பிறகு ரயில்வே அணியில் இடம்பெற்று மறுபடியும் கிரிக்கட்டை தொடர்ந்தார். அதன் மூலம் 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் சேர்ந்து 2005 ஆம் ஆண்டு சர்வதேச சதத்தை அடித்து மக்களின் கவனத்தைப் பெற்றார்.
IPL தொடரிலும் கலந்துக் கொண்டு அன்று முதல் இன்று வரை சாதனை படைத்து, கிரிக்கெட் உலகின் கடவுளாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தோனி. சிறியவர் முதல் பெரியவர் வரை தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. எளிமையின் மறுஉருவம் தோனி.
தோனி இல்லாமல் IPL இல்லை சென்னை அணி இல்லை என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். தற்போது தோனியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், 2050 ஆண்டு தோனி IPL தொடரில் விளையாடினால் அவரது தோற்றம் எப்படி இருக்கும், வெள்ளை நீண்ட தாடி மற்றும் சுருக்கமடைந்த முகத்துடன் இருக்கும் என்ற கற்பனையில் ரசிகர்கள் உருவாக்கிய புகைப்படம் வைரலாகி இணையவாசிகள் அதை தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர்.