சொல்லியடிச்ச கில்லி!.. ரீ – ரிலீஸில் வசூல் சாதனை!.. முதல் நாளே இத்தனை கோடி கல்லா கட்டுதா?..

By Sarath

Published:

தரணி இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளியான கில்லி திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ அதே அளவுக்கான வரவேற்பு 20 ஆண்டுகள் கழித்தும் திரையரங்குகளில் இருப்பதாக ரசிகர்கள் மற்றும் தியேட்டர் ஓனர்கள் சந்தோசத்துடன் கூறி வருகின்றனர்.

வசூல் வேட்டையாடும் கில்லி ரீ ரிலீஸ்:

கில்லி படத்தின் ரீ ரிலீஸ் கொண்டாட்டத்தை வெறும் மூன்று பேர் மட்டுமே தியேட்டரில் ஏறி நடனமாடி கொண்டாடுகின்றனர். இதுதான் உங்கள் ரேஞ்சா என சூர்யா ரசிகர்கள் ஒரு பக்கம் ட்ரோல் செய்து வரும் நிலையில், கில்லி படத்தை ஒட்டுமொத்த தியேட்டரும் பொண்டாட்டி வரும் காட்சிகளை விஜய் ரசிகர்கள் பதிவிட்டு அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

கமலா சினிமாஸ் தியேட்டர் ஓனர் சொல்லும்போது இதுவரையில் வெளியான ரீ ரிலீஸ் படங்களை விட இந்த ஆண்டு வெளியான புது படங்களை விட கில்லி ரிலீஸ் படத்துக்கு வெறித்தனமான ரெஸ்பான்ஸ் இருந்ததாக கூறியுள்ளார்.

திரிஷா உற்சாகம்:

நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கில்லி படத்தின் ரிலீஸ் தன்னை சந்தோசத்தில் ஆழ்த்தி இருப்பதாகவும் ரசிகர்கள் இன்னுமும் அந்த படத்தை அதே வைபுடன் கொண்டாடி வருவது ரொம்பவே மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் ட்வீட்:

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் டைம் டிராவல் செய்து கில்லி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து அனுபவத்தை இன்று ரசிகர்கள் கொடுத்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமா பிரபலங்கள் பலரும் கில்லி படத்தின் ரீ ரிலீஸை முதல் நாளிலேயே தியேட்டருக்கு சென்று உற்சாகத்துடன் பார்த்து வரும் நிலையில் அது தொடர்பான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கில்லி படம் முதல் நாளில் ஏழு கோடி ரூபாய் வசூலை ரீ ரிலீஸ் மூலமாக பெறும் என மாலை நேர பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் வெளியாகியுள்ளன. அந்த அளவுக்கு முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் புக்கிங் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தியேட்டருக்கு நேரடியாக வந்து பார்க்கும் ரசிகர்களின் கூட்டமும் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.

முதல் நாள் வசூல்:

இந்த வாரம் தமிழ் சினிமாவில் புதிதாக எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில் கடந்த வாரம் வெளியான ரோமியோ மற்றும் டியர் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவராத நிலையில் கில்லி படத்தின் ரிலீஸ் இதே வேகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளில் ஓடினால் 20 கோடி வசூலை தாண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம் அதிகபட்சமாக 16 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஈட்டியதாக கூறப்படும் நிலையில், கில்லி படத்தின் ரிலீஸ் வசூல் அதைவிட அதிகமாகவே வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கின்றனர்.