மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ந்து தடுமாற்றத்தை கண்டு வரும் அதே வேளையில் ரோஹித் ஷர்மா இவை எதைப் பற்றியும் தனது காதில் போட்டுக் கொள்ளாமல் மிகச் சிறப்பாக தனது பேட்டிங்கை மட்டும் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடிவரும் அதே வேளையில் ரோஹித் சர்மா, ஏறக்குறைய 300 ரன்களையும் நடப்பு ஐபிஎல் தொடரில் எட்டிவிட்டார்.
இந்த சீசன் மும்பை அணிக்கு அந்த அளவில் கை கொடுக்காமல் இருந்து வரும் நிலையில் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மும்பை அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வியை சந்திக்க தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடி வருகின்றனர்.
அந்த அணியின் பந்து வீச்சை பொறுத்தவரையில் பும்ராவை தவிர யாரும் தொடர்ந்து நல்லதொரு பங்களிப்பை அளிக்காமல் இருந்து வருகின்றனர். அதே வேளையில், பேட்டிங்கில் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் என ஒரு சிலர் நல்லதொரு ரன்னையும் அடித்து வருகின்றனர்.
தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இஷான் கிஷன் 8 ரன்களில் அவுட்டாகி இருந்த நிலையில் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், அரைச்சதம் அடித்து அசத்த, ரோஹித் ஷர்மா 36 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். அப்படி இருக்கையில், இந்த சீசனில் ரோஹித் ஷர்மாவின் முக்கியமான ஒரு புள்ளி விவரம் பல கிரிக்கெட் ஜாம்பவான்களையே மிரள வைத்துள்ளது.
இந்த சீசனில் 297 ரன்களை அடித்துள்ள ரோஹித் சர்மா, அவர் சந்தித்த அணிகளில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்டிங் சராசரி 95-க்கு மேல் வைத்துள்ளதுடன் அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 173 க்கு மேல் உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களை கவனமாக எதிர்கொண்டு ஆடும் ரோஹித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் என வந்துவிட்டால் அடி பிரித்து விடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி ரோஹித் காட்டும் அதிரடி தான் அவரது பேட்டிங்கிலும் பிரதிபலித்து அதன் முடிவான புள்ளி விவரங்களும் பலரை மலைக்க வைத்துள்ளது.