Indigo விமானத்தில் அதிக சோடியம் உள்ள உணவு வழங்கப்படுவதாக வாடிக்கையாளர் ஒருவர் X தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்… என்னவா இருக்கும்…?

By Meena

Published:

Indigo விமானத்தில் வழங்கப்படும் ‘உப்மா’ மற்றும் ‘போஹா’ ஆகியவற்றில் மேகியை விட அதிக சோடியம் இருப்பதாக ஒரு சமூக ஊடக இன்ப்ளூஎன்சர் கூறியுள்ளார். அதே நேரத்தில் விமான நிறுவனம் அதன் முன் பேக்கேஜ் செய்யப்பட்ட தயாரிப்புகளில் உப்பு உள்ளடக்கம் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்குள் உள்ளது என்று கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில், Revant Himatsingka ‘Food Pharmer’ என்ற பயனர் IndiGo வழங்கும் உணவைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் வீடியோ உள்ளது என்று கூறினார். “மேகி அதிக சோடியம் நிறைந்த உணவு என்பது நம்மில் பலருக்கு முன்பே தெரியும்! பெரும்பாலானோருக்கு  தெரியாதது என்னவென்றால், இண்டிகோவின் மேஜிக் உப்மாவில் மேகியை விட 50 சதவீதம் சோடியம் அதிகமாக உள்ளதாகவும், இண்டிகோவின் போஹாவில் மேகியை விட 83 சதவீதம் சோடியம் அதிகமாக உள்ளதாகவும் மற்றும் பருப்பு சாவலில் மேகியின் அளவுக்கு சோடியம் உள்ளது என அவர் புதன்கிழமை X இல் ஒரு பதிவில் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை ஒரு அறிக்கையில், இண்டிகோ சில முன்-தொகுக்கப்பட்ட தயாரிப்புகளின் தயாரிப்பு பாரம்பரிய இந்திய சமையல் முறைகளின்படி செய்யப்படுகிறது மற்றும் உப்பு உள்ளடக்கம் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்குள் உள்ளது.

மேலும், IndiGo மிகவும் பிரபலமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே புதிய மற்றும் முன் தொகுக்கப்பட்ட உணவை வழங்குகிறது. இண்டிகோ விமானங்களில் வழங்கப்படும் அனைத்து உணவுகளும் எஃப்எஸ்எஸ்ஏஐ விதிமுறைகளின்படி பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து தகவல்கள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளன” என்று பதிலளித்து இருந்தது. மேலும், சேவைகளை மேம்படுத்துவதற்கான அனைத்து கருத்துக்களையும் வரவேற்பதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. பேக்கேஜில் அச்சிடப்பட்ட தகவல்கள், பயணிகளின் ஊட்டச்சத்து அளவை மதிப்பிடுவதற்கும், அவர்களின் விருப்பப்படி நுகர்வதற்கும் ஆலோசனையாக செயல்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனவரி மாதம், உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான FSSAI, விமானத்தில் பரிமாறப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததை அடுத்து, பயணி ஒருவருக்கு பாதுகாப்பற்ற உணவை வழங்கியதற்காக IndIGo நிறுவனத்திற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜங்க் ஃபுட்களை விட பேக்ட் ஃபுட் ஆரோக்கியமாக இருப்பது போல் பாசாங்கு செய்வது ஆபத்தானது என்றும் ஹிமத்சிங்கா கூறியுள்ளார்.இந்தியர்கள் ஏற்கனவே தங்களது உணவில் அதிக உப்பு சேர்த்து உண்ணும் பழக்கம் கொண்டவர்கள், மற்றும் அதிகப்படியான சோடியம் உட்கொள்வது நமது இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது, மேலும் உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படலாம்,” என்று அவர் கூறினார். அதிக உயரத்தில் சுவை மொட்டு உணர்திறன் குறைகிறது, அதனால் பெரும்பாலான விமான நிறுவனங்கள் உணவில் அதிக உப்பு சேர்ப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

 

Tags: Indigo