சித்தார்த் நடிகர் மட்டும் அல்ல பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் உதவி இயக்குனரும் ஆவார். 2003 ஆம் ஆண்டு ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படமான ‘பாய்ஸ்’ படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் சித்தார்த் நடித்துள்ளார். 2000 களின் பிற்பகுதியில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தார். ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜிகர்தண்டா’, ‘காவிய தலைவன்’, ‘அரண்மனை-2’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘அருவம்’ போன்ற திரைப்படங்கள் சித்தார்த் நடித்து பிரபலமானது ஆகும்.
சித்தார்த் சில படங்களை தயாரித்தும் உள்ளார். கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நாயகனாக நடித்த திரைப்படம் ‘சித்தா’. குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்வதைப் பற்றிய விழிப்புணர்வு படமாக ‘சித்தா’ திரைப்படம் இருந்தது.
‘சித்தா’ திரைப்படம் பெண்களிடம் அமோக வரவேற்ப்பு பெற்று நல்ல விமர்சனங்களையும் பெற்றது. அந்த படத்தை பார்த்தவர் கண்களில் கண்ணீர் வராமல் இருக்காது. அப்படி எமோஷனலாக இருந்தது அத்திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு JFW விருது வழங்கியுள்ளது. விருதை பெற்றுக் கொண்ட சித்தார்த் மேடையில் கண்ணீருடன் பேசியுள்ளார்.
அவர் பேசியது என்னவென்றால், சித்தா திரைப்படம் பெண்களுக்கானது. ஆண்களை விட பெண்கள் தான் பாலியல் ரீதியாக அதிகமாக சந்தித்திருப்பார்கள். இப்போது உள்ள சமூகத்தில் குழந்தைகளும் விதிவிலக்கல்ல. இந்த நேரத்தில் நாம் இதைப் பற்றி பேசியாக வேண்டும். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. பேச பேச தான் மாறும். சித்தா படத்திற்குப் பிறகு கடந்த ஆறு மாதத்தில் 10.000 திற்கும் மேலான பெண்கள் அவங்க வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு அண்ணனாக, சித்தாவாக நினைத்து என்னிடம் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்கள். இந்த விருது பெண்களுக்கு சமர்ப்பணம் என்று கண்ணில் கண்ணீருடன் எமோஷனலாக பேசியுள்ளார் சித்தார்த்.