இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. 1977 ஆம் ஆண்டு ’16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பல புதுமுக நடிகர் நடிகைகளை தன் படத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தியவர். மண் மணம் மாறாத கிராமத்து திரைப்படங்களை எதார்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் இயக்குவதில் வல்லவர்.
80களில் உச்சகட்ட இயக்குனராக புகழ்பெற்று வலம் வந்தவர் பாரதிராஜா. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற வசனத்தின் மூலமாக திரைப்படத்தை ஆரம்பித்து அந்த வசனத்தை ட்ரெண்ட் ஆக்கினார். இவரது படத்தில் வரும் கதாநாயகருக்கும், கதாநாயகிகளுக்கும் எளிமையான உடை மற்றும் அழகு சாதனங்கள் பயன்படுத்தாமல் கிராமத்து பாணியில் எடுப்பார். ’16 வயதினிலே’ படத்திற்கு பிறகு அதிகப்படியான கிராமத்து படங்கள் வெளிவர தொடங்கின.
இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் இன்றளவும் மதிக்கப்படுபவர் பாரதிராஜா. இவரது படத்தில் வரும் கருத்துக்கள் சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். ஆறு தேசிய திரைப்பட விருதுகள், ஆறு தமிழ்நாடு திரைப்பட விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது, கௌரவ டாக்டர் பட்டம் ஆகியவற்றை பெற்றவர்.
தற்போது AVM தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் மாஸ்டர்ஸ் விருது நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. அதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்துள்ளனர். விருதினை பெற்ற பிறகு மேடையில் பேசிய பாரதிராஜா AVM ஐ புகழ்ந்து சில நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், AVM யாராலும் அசைக்க முடியாத ஒரு இரும்பு கோட்டை. பல பேருக்கு வாய்ப்பு அளித்து வாழ்வளித்தவர்கள் ஏவிஎம் சரவணன் அவர்கள். ஒரு காலத்தில் ஏவிஎம் வாசலில் சான்ஸ்க்காக நின்று கொண்டிருந்தேன். இன்று அவர்களுக்கு கையால் விருது வாங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று பேசியுள்ளார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.