தமிழ்சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து அப்டேட்… ஏன்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

6 மாத காலமாக தமிழ்சினிமா ஒரே தேக்க நிலையில் தான் இருக்கு. தொய்வடைந்த சூழல். படம் வருவதும் தெரியவில்லை. போவதும் தெரியவில்லை. பெரிய நடிகர்கள், முன்னணி நடிகர்கள் படங்கள் எல்லாமே சூட்டிங் பிராசஸில் இருக்கு.

ரஜினியோட வேட்டையன் படம் முடிந்தது. அடுத்து விஜயின் கோட், அஜீத்தின் விடாமுயற்சி, தங்கலான், கங்குவான்னு பல படங்கள் வருகிறது. அதனால் இப்போது இருந்தே படத்திற்கான விளம்பரங்கள், ரிலீஸ் மாதத்தை அறிவிக்கிறார்கள். இதுகுறித்து பத்திரிகையாளர் சங்கர் மேலும் தெரிவித்துள்ளது இது தான்…

Thangalan, Ganguva
Thangalan, Ganguva

வேட்டையன் அக்டோபரில் ரிலீஸ். இந்தியன் 2 ஜூன் மாதம் வெளியாவதாக அறிவித்துள்ளார்கள். தங்கலான் படத்திற்கு ஒரு போஸ்டர் மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தப் படத்தையும் பெரிய அளவில் புரொமோஷன் கொடுத்து வெளியிட உள்ளார்கள்.

வேட்டையன் படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். அடிமைப்பட்டுக் கிடக்கும் தொழிலாளர்களை மீட்கும் கதை. வேட்டையன் படம் தலைப்புக்குப் பொருத்தம். ரஜினி இன்னும் இளமையாக இருப்பதை ரசிகர்கள் தாண்டி பொதுமக்களும் உணர்கிறார்கள். இந்த ரஜினி 80ஸ் காலகட்டத்தில் பார்த்ததைப் போல உள்ளது.

அக்டோபர் 2ல் காந்தி ஜெயந்தி அல்லது தீபாவளி ஸ்பெஷலாக இந்தப் படம் திரைக்கு வர உள்ளது. இந்தியன் 2 படத்தின் புரொமோஷனுக்கான வேலைகள் தான் நடந்து வருகிறது. இவ்வளவு காலமாகி விட்டதே மக்கள் இந்தப் படத்தைப் பார்ப்பார்களா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. ஸ்பைடர்மேன், ஜேம்ஸ்பாண்டு போல எவர்கிரீன் கேரக்டர் தான் இந்தியன் தாத்தா. அதனால இந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப கமல் கலக்கியிருப்பார் என்பது நிச்சயம்.

Goat, Vidamuyarchi
Goat, Vidamuyarchi

80கள் ரஜினி வந்து ரொம்ப ஸ்டைலாக பாடி லாங்குவேஜிலும் அசத்தியிருப்பார். கார்த்தி சுப்புராஜ் கூட ரஜினியை ரீகிரியேஷன் பண்ணித் தான் பேட்ட படத்தில் எடுத்திருப்பார். அதே போல லோகேஷ் கனகராஜிக்குக் கூட அப்படி ஒரு எண்ணம் இருக்கும். ரஜினியை இப்படிக் காட்டினா நல்லாருக்கும்னு நினைச்சித் தான் அதுக்கு ஏற்ற மாதிரி அவரோட கெட்டப்ப வச்சிருப்பாரு. இந்தப் படம் ஜெயிலரை விட ஒரு படி அதிகமாக இருக்கும் என்று தான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.