பிக்பாஸ் வீட்டிற்குள் தான் நட்பு எல்லாமே… வெளியே வந்துட்டா ஒண்ணுமே இல்லை… ராபர்ட் மாஸ்டர் கருத்து…

By Meena

Published:

ராபர்ட் ராஜ் ஒரு நடன இயக்குனர் மற்றும் நடிகராவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர். 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அழகன் ‘ என்ற திரைப்படத்தில் நடிகர் மம்முட்டியின் மகனாக நடித்து சினிமா துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

பின்னர் பல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாது நடன இயக்குனராக பல பாடல்களில் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கும் பாடல்களில் ராபர்ட் மாஸ்டர் கேமியோ தோற்றத்தில் தோன்றுவார். 2012 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்து வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடன இயக்குனருக்கான விஜய் விருதை வென்றார்’.

அதுமட்டுமல்லாது சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் குறிப்பாக நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் தோன்றியுள்ளார். அதற்குப் பிறகு விஜய் டிவியின் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 இல் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

தனது தன்மையான பேச்சினாலும் செய்கையினாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதே சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டிருந்த சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மியை மூக்குத்தி என்று செல்லமாக அழைத்து அவரை இம்ப்ரெஸ் செய்வதற்காக ராபர்ட் மாஸ்டர் செய்த சின்ன சின்ன வேலைகள் மக்களால் ரசிக்கப்பட்டது.

தற்போது நடந்த ஒரு பட நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ராபர்ட் மாஸ்டரிடம் பத்திரிகையாளர்கள் பிக் பாஸ் பற்றிய கேள்விகளைக் கேட்டனர். பலதரப்பட்ட கேள்விகளுக்கு ராபர்ட் மாஸ்டர் பதில் அளித்தது என்னவென்றால், பிக் பாஸ் நான் கலந்துக் கொண்ட சீசனில் நான் தான் சீனியர், அங்க டிஆர்பி க்காக எதுவும் செய்யவில்லை. அங்கு வெளியுலகம் தெரியாது உள்ள இருக்கிறவங்கள தான் திரும்ப திரும்ப பாக்கணும், அதுனால எதாவது பண்ணித்தானே ஆகணும்.

அப்படிதான் ரச்சிதா மஹாலக்ஷ்மியை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுனால மூக்குத்தி அப்டினு சொல்லி கலாய்ச்சிட்டு இருந்தேன். இப்போ வெளிய வந்த அப்புறம் நான் அவங்ககிட்ட பேசவே இல்லை அவங்க நம்பர் கூட எனக்கு தெரியாது அவங்க வேலையை அவங்க பாக்குறாங்க என் வேலையை நான் பாக்குறேன். இது மாதிரி தான் எல்லாருமே. அங்க மாமா மச்சான்னு பழகினவங்க யாருமே வெளியே வந்து பேசல. உள்ளேதான் நட்பு எல்லாம், வெளியே அப்படி இல்லை அவங்கவங்க வாழ்க்கைல பிஸி ஆகிட்டாங்க என்று கூறியிருந்தார் ராபர்ட் மாஸ்டர்.