இந்த விரதம் இருந்தால் புளிப்பை சாப்பிட்டுவிடாதீர்கள்

By Staff

Published:

2db98c5e28ea8ca4cc539704549439f2

சந்தோஷிமாதா விரதம் எல்லோருக்கும் உரிய விரதம். இந்த விரதத்தை வெள்ளிக்கிழமை அன்று தொடங்க வேண்டும். தொடங்கியது முதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சந்தோஷி மாதா பூஜை செய்துவர வேண்டும்.

இந்த விரதத்தால் சகல மங்களங்களும் யோகங்களும் உண்டாகும். சந்தோஷிமாதா விரதத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். அன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சந்தோஷி மாதா பூஜை செய்துவர வேண்டும்.

சந்தோஷிமாதாவுக்கு மிகவும் உகந்தது வறுத்த   கடலையும், வெல்லமுமே ஆகும். விரதத்தை வீட்டிற்குள்ளோ இல்லை தனியான இடங்களிலோ, கோயில்களிலோ செய்யாலம். சந்தோஷிமாதா படத்தை வைத்து பூக்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய   வேண்டும். படத்தின் முன் நெய் விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்.

கிண்ணம் ஒன்றில் கொஞ்சம் வறுத்த கடலையையும் வெல்லத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கையில் கொஞ்சம் வறுத்த   கடலையும், வெல்லமும் எடுத்துக் கொண்டு, எண்ணிய காரியம் நிறைவேற வேண்டும் என்று மனதில் திடமான நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து, விநாயகர்   பூஜையையும், சந்தோஷிமாதா பூஜையையும் செய்ய வேண்டும். பிறகு சந்தோஷி மாதாவின் கதையைப் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும்.

கதை படித்து முடிந்ததும் மாதாவைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த விரதத்தில் புளிப்பு சேர்க்க கூடாது. புளிப்பு மோர் அல்லது புளிப்பு பழங்கள் கூட தொடக் கூடாது.

இதே போல் பதினாறு வெள்ளிக் கிழமைகள் செய்து, பின் பதினேழாவது வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து எட்டு குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டும். பின் அவர்களுக்கு தட்சணையாக துணியோ அல்லது பொருளோ கொடுக்கலாம் ஆனால் பணம் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் அந்தப் பணத்தில் தப்பி தவறி புளிப்பு பண்டங்கள் சாப்பிட்டு விட்டால் பூஜை பலனளிக்காது.

Share

Leave a Comment