உலகநாயகன் கமல் தற்போது அரசியலிலும், சினிமாவிலும் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக ஒரு மாதம் சூறாவளிப்பிரச்சாரம் செய்ய உள்ளதால் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதை நிறுத்தி உள்ளார். அது தான் மணிரத்னம் இயக்கி வந்த தக்லைப்.
இந்தப் படத்தில் இருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா விலகி விட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தக் லைப் படத்தைப் பொறுத்த வரை எலெக்ஷன் முடிந்ததும் மீண்டும் அதற்கான படப்பிடிப்பு நடக்கும் என்று கமல் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க… ’இனிமேல்’ பாடலில் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்!.. லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஜோடி சூப்பரா இருக்கே!..
இந்தியன் 2, இந்தியன் 3 ஆகிய படங்களுக்கான சூட்டிங் முடிந்த நிலையில் தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. கமல் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வர உள்ள நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று வந்து ரசிகர்களுக்கு ஒரு குண்டைத் தூக்கி போட்டுள்ளது.
கமல் பிரபாஸ் நடித்த கல்கி 2898 AD படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கிறார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது அல்லவா? ஆனால் இப்போது அந்த நியூஸ் புஸ்ஸாகி விட்டதாம். கமல் அந்தப் படத்தில் வெறும் கெஸ்ட் ரோலில் அதாவது கேமியோ ரோலில் தான் வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

அப்படின்னா இவ்ளோ நாள் சொன்னது படத்துக்காக வெறும் விளம்பரம் தானா என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்னடா இது இவ்வளவு காலம் நாம இதுக்காகவா காத்திருந்தோம்? கமலின் அடுத்த பரிணாமத்தை அதாவது வில்லன் அவதாரத்தை எப்படியாவது பார்த்து ரசித்து விட வேண்டும் என்று அல்லவா வழிமேல் விழி வைத்து காத்து இருந்தோம் என்கின்றனர் ஆண்டவரின் ரசிகர்கள்.
அதே போல கமல் மகள் சுருதிஹாசனின் இனிமேல் ஆல்பத்தில் கமல் பாடியது வேற லெவலில் உள்ளது. படமாக்கப்பட்ட விதமும் செம மாஸாக உள்ளது என்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முதலில் மே 30ம் தேதி இந்தியன் 2 ரிலீஸாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தலின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


