தீபத்தால் ஏற்படும் நல்ல பலன்கள்

By Staff

Published:

3e40d1472919f1312d64010f74c14576

தீபம் ஏற்றி வழிபடுவது ஹிந்துக்களின் வழிபாட்டில் ஒரு மங்களகரமான விசயமாகவே பார்க்கப்படுகிறது. தீபம் ஏற்றுவதால் ஒரு வீட்டில் என்ன என்ன நன்மைகள் ஏற்படுகிறது என பார்ப்போம்.

கோயில், நதிக்கரை, கோசாலை, மகான்களின் சமாதி போன்ற புனிதமான இடங்களில் தீபமேற்றி வழிபடுவதால், ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும். மனதில் சாந்தியும், புத்தியில் தெளிவும் பிறக்கும். தீபமேற்றும்போது, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஏற்றுவது விசேஷமானது.

“”அக்னிர் ஜ்யோதீ ரவி ஜ்யோதிஷ் சந்த்ரோ ஜ்யோதிஸ் ததைவச
உத்தம: ஸர்வஜ்யோதீநாம் தீபோயம் ப்ரதி க்ருஹ்யதாம்”

ஸ்லோகம் சொல்ல முடியாதவர்கள், “”நெருப்பு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று ஒளிகளில் சிறந்ததான இந்த தீபத்தின் ஒளியை, தங்களுக்கு இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன்.என  கருணையுடன் இதை ஏற்றுக் கொண்டு அருள்புரிய வேண்டும்” என்று சொல்லி வணங்க வேண்டும்.

இப்படி செய்வதால் நன்மைகளும் சுபிட்ஷமும் உண்டாகும்

Leave a Comment