அடடே!.. அந்த மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் பெற்ற படம் இந்த தேதியில் ஓடிடியில் வருதா?

By Sarath

Published:

கடந்த சில மாதங்களாக மலையாளப் படங்கள் தமிழ் படங்களுக்கு டஃப் கொடுத்து வந்துக்கொண்டிருக்கின்றன. பிரேமலு படத்தில் ஆரம்பித்து பிரம்மயுகம், மஞ்சுமல் பாய்ஸ் வரை மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் பிரேமலு திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை மார்ச் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், அந்த படத்தின் ஒடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி 9ம் தேதி பாவனா ஸ்டுடியோஸ் நிருவனம் தயாரிப்பில் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லென் கே.கபூர், மமிதா பைஜு நடிப்பில் வெளியான பிரேமலு திரைப்படம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தது. இப்படத்தில் ஷ்யாம் மோகன், சங்கீத் பிரதாப், அகிலா பார்கவன், மினாட்சி ரவீந்திரன் , மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவையுடன் உருவான பிரேமலு படத்திற்க்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

100 கோடி வசூல்:

9கோடி ரூபாயில் உருவான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று 100 கோடி வசூலை அள்ளியது. மேலும் 100 கோடி வசூலித்த மலையாள படங்களில் பிரேமலு ஐந்தாவது இடத்தை பிடித்தது. மலையாள படங்கள் ரியலாக எடுத்தாலும் எதிர்ப்பார்த்த அளவிற்கு வசூலை பெறாது. ஆனால் இந்த ஆண்டு வெளியான மூன்று படங்களும் தமிழ்கத்திலும் வசூலை அள்ளி குவித்தது. மேலும் இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு மார்ச் 8ம் தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து தமிழில் டப் செய்யப்பட்டு நாளை மார்ச்15ம் தேதி வெளியாக உள்ளது.

 ஓடிடி ரிலீஸ்: 

பிரேமலு படத்தின் ஓடிடி உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படம் மார்ச் 29ம் தேதி ஹாட் ஸ்டாரில் டப் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக மோகன்லால் நடிப்பில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ஓடிடி உரிமையையும் ஹாட் ஸ்டார் தான் வழங்கியது. இதை தொடர்ந்து பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் ஆகிய படங்களின் ஓடிடி உரிமையையும் ஹாட் ஸ்டார் கைபற்றுமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

பிரேமலு படத்தின் தமிழ் டப்பிங் மிகவும் மோசமாக உள்ளதாக விமர்சித்து வருகின்றனர். மேலும் அவசரமாக டப்பிங் செய்வதற்கு காரணம் இப்படம் ஓடிடியில் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது தான் என்கின்றனர். மோசமான தமிழ் டப்பிங் உள்ள நிலையில், ரசிகர்கள் தியேட்டரில் இந்த படத்தை தமிழில் பார்க்காமல் கொஞ்சம் வெயிட் பண்ணி ஓடிடியிலேயே பார்த்து விடுவார்கள் என்கின்றனர்.