நான் என்றும் ஹீரோ இல்லை… மாஸ்டர் மகேந்திரன் கருத்து…

By Meena

Published:

மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு வெளியான ‘விழா’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இரண்டு தடவை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும், நந்தி விருதினையும் பெற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பீப்பிள் ப்ரொடெக்ஷன் ஹவுஸ் சார்பாக முரளி ஸ்ரீனிவாசன் மற்றும் என். வி கிரியேஷன்ஸ் நாகராஜன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் இயக்கியுள்ளார் மற்றும் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாஸ்டர் மகேந்திரன், நான் ஒன்றும் ஹீரோ இல்லை, எப்போதும் உங்கள் வீட்டுப் பையன் தான். 30 வருடங்களாக எனக்கு ஆதரவு அளித்து கொண்டிருக்கிறீர்கள், அதற்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா காலகட்டத்தில் சினிமாவை நினைத்து மிகவும் பயந்து விட்டேன். அடுத்ததாக என்ன செய்ய போகிறேன் என்ற பயம் என்னுள் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குனர் பிரஷாந்த் வந்தார். பல கஷ்டங்களுக்கு பிறகு இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இப்படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் என்று கூறினார்.

இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளர். விஜயகுமார் சோலைமுத்து மற்றும் ரூபன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளனர். வருகிற மார்ச் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் இத்திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.