வரலாற்றுக் காவியங்களில் மிக முக்கியமானது இராமாயணம். அதை பல மொழிகளில் பல காலகட்டங்களில் திரைப்படமாக எடுத்து உள்ளனர். தற்போது 1000 கோடி பட்ஜெட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் பான் இந்தியா திரைப்படமாக இராமாயணத்தை மறுஉருவாக்கம் செய்ய உள்ளனர்.
பாலிவுட் இயக்குனர் நிதிஷ் திவாரி இப்படத்தை இயக்கவுள்ளார். கதையின் நாயகன் ராமனாக பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடிக்க உள்ளனர். தனக்கு இராவணன் கதாபாத்திரம் தான் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்கிய கே. ஜி. எப். நடிகர் யாஷ், இராவணன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார். அனுமன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சன்னி தியோல் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வருகிற ஏப்ரல் 17 ஆம் தேதி இராம நவமி அன்று வெளியாகும் எனவும் அன்றிலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அடுத்த ஆண்டு 2025 தீபாவளி அன்று பல மொழிகளில் இராமாயணம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் காட்சியமைப்பிற்காக படக்குழு ஐந்து ஆண்டுகளாக முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். மக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட சிறப்பான கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் ‘இராமாயணம்’ திரைப்படத்தை நேர்த்தியாக, படத்தை காண்போரை ராமர் வாழ்ந்த காலத்திற்க்கே கூட்டி செல்ல வேண்டும் என்று உழைத்து கொண்டிருக்கிறோம் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்திற்காக ரன்பிர் கபூர் கூடுதல் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்கர் அவார்டை வென்ற டி. என். ஈ . ஜி கம்பெனி வி. எப். எக்ஸ் பணியாற்றவுள்ளனர். ஆதலால் உலகளவில் இப்படம் பார்வையாளர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. இராமாயணத்தின் வலிமை அதனை காட்சிப்படுத்தும் வகையில் மட்டும் அல்ல, கதாபாத்திரங்கள் இடையேயான உணர்ச்சிகளும் ஆகும். சிறப்பான படக்குழுவை கொண்டுள்ள இத்திரைப்படத்தை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.