கமலுக்கு ரொம்ப பிடிச்சது.. ரஜினிக்கு சுத்தமா பிடிக்காது.. இருவரின் FOOD SECRETS இதான்

By John A

Published:

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றாலே இன்று சத்துக்கள் மிகுந்த உணவினை உண்டு அதற்கேற்றாற் போல் உடற்பயிற்சி செய்து உடலினை முறுக்கேற்றி ஒவ்வொரு படங்களிலும் நடித்து வருகிறார்கள் நடிகர், நடிகைகள்.

தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றாற் போல உடல் எடை கூட்டுவதும், குறைப்பதும் என தங்களது உடலையே மூலதனமாகக் கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றனர். இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல் ஆகியோரும்  தங்களது ஆரம்ப காலப் படங்களில் உடலை முறுக்கேற்றி வில்லன்களை துவம்சம் செய்தனர். இவர்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்தது அவர்களின் உணவு முறை தான்.

உதாரணமாக ரஜினியின் உணவு முறையானது 80களில் சத்தான சாப்பாடும், கூடவே மது உள்ளிட்டவையும் இருக்கும். தனது திருமணத்திற்குக் கூட பத்திரிக்கையாளர்களுக்கு மதுவிருந்து வைத்திருக்கிறார். இதில் என்ன ஒரு விஷயம் என்றால் ரஜினி அளித்த மது விருந்தில் அப்போது சைடிஷ் இல்லையாம்.

சைடிஷ் எங்கே என்று கேட்டவர்களுக்கு இதுதான் ரஜினியின் ஸ்டைல் இப்படித்தான் நான் மது அருந்துவேன் என்று கூறியுள்ளாராம். அதன்பின் மது, சிகரெட் உள்ளிட்டவைகளை விட்டொழித்து ஆன்மீகத்தின் பக்கம் திரும்பி இன்று வயது 70-ஐ தாண்டிய நிலையில் ஆரோக்கியமான சத்தான உணவுகளையே உண்டு வருகிறார்.

உங்களுக்கு கமல் மாதிரி நடிக்கத் தெரியல.. எந்திரன் ஷூட்டிங்கில் கடுப்பான ரஜினி..

முக்கியமாக வெள்ளை நிற உணவுகள் ரஜினிக்கு ஆகாதாம். சோறு, தயிர் உள்ளிட்டவற்றை அதிகமாக விரும்பி உண்ணமாட்டாராம். ஆனால் இதற்கு நேர்மாறானவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சாப்பிடாத உணவுகளை இல்லையாம். சீன மக்கள் விரும்பி உண்ணும் உணவுகளைக் கூட இவர் விட்டு  வைக்கவில்லையாம். உலக உணவுக் கலாச்சாரம் அத்தனையையும் கமல்ஹாசன் ஒரு கை பார்த்திருக்கிறார். அந்த அளவிற்கு அசைவப் பிரியராம். மேலும் அவ்வப்போது சிறிதளவு மது அருந்தும் பழக்கமும் இருக்கிறதாம்.

ஆனால் எப்படி சாப்பிட்டாலும் மறுநாள் காலை 5 மணிக்கே எழுந்து ஜாக்கிங் செல்வாராம். அதேபோல் ரஜினியும் யோகா செய்து தங்களது உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கின்றனர்.

இவ்வாறு இவர்கள் இருவரும் தங்களது உணவு விஷயத்தைக் கடைபிடித்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.