மஹா விஷ்ணுவின் அவதாரத்தில் 4வது அவதாரம்தான் நரசிம்ம அவதாரம். ஸ்ரீநரசிம்மரை வழிபட்டால் எந்த நிலையிலும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அரணாக இருந்து காப்பார். பிரகலாதனின் பக்தியை மெச்சி தூணில் இருந்து நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து பிரகலாதனை கொடுமைப்படுத்திய அவனது தந்தை இரண்ய கசிபுவை தண்டித்தார் ஸ்ரீமன் நாராயணன்.
நரசிம்மர் அவதாரம் எடுத்த நிகழ்வை கொண்டாடும் வகையில் நரசிம்ம ஜெயந்தி கடைபிடிக்கப்படுகிறது. தற்போது கொரோனா வேறு ஆட்டம் போட்டு வரும் இந்த வேளையில் கோவிலுக்கு யாரும் செல்ல முடிவதில்லை அதனால் வீட்டிலேயே இருந்து விரதம் கடைபிடித்து நரசிம்மரை வணங்கி அவரது அருள் பெறுங்கள்.
நரசிம்மர் ஜெயந்தி விரதம்:
நாளை காலை இந்த விரதத்தை தொடங்கி, நாள் முழுவதும் நரசிம்மரின் நினைவுடன் ஆராதித்து வழிபட்டு, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 வரை பூஜை, புனஸ்காரம் செய்து வழிபட்டு விரதத்தை முடிப்பது நல்லது.
நரசிம்மருக்கு சர்க்கரை பொங்கலும், பானகம் மற்றும் அவரை குளுமையாக்கும் வகையில் சில குளுமையான பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவது மிக சிறந்தது.
நரசிம்மரின் மந்திரங்களை சொல்லியும் முடியாவிட்டால் மனதார அவரை நினைத்து தியானம் செய்து வழிபடுவதும் சிறப்பை தரும்.
வாழ்வில் ஏற்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நீக்கி வாழ்வில் நிம்மதி அளிப்பார் நரசிம்மர்.