பொதுவாக சினிமாவில் ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விதமான பாணியைக் கடைப்பிடித்து நடிப்பார்கள். அந்தக் காலம் தொட்டே பார்த்தோமானால் நடிப்பின் சிகரமாய் விளங்கினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆனால் அதே வேளையில் எம்.ஜி.ஆர். ஹீரோயிசத்துக்காகவே பேசப்பட்டார்.
அதற்கு அடுத்த வந்த தலைமுறையான ரஜினி, கமல் இருவரில் கமல் எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பில் வெளுத்து வாங்குவார். ஆனால் ஹீரோயிசம் என்று பார்த்தால் அது ரஜினிக்கு மட்டுமே வரும். இதேபோல் இந்தத் தலைமுறை நடிகர்கள் வரை அதுபோன்றதொரு விவாதம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் எந்திரன் பட ஷுட்டிங்கின் போது ரஜினியிடம் உங்களுக்குக் கமல் மாதிரி நடிக்கத் தெரியலை என்று கூறி அவரை அப்செட் ஆக்கிய சம்பவம் நடைபெற்றதாம். இயக்குநர் ஷங்கர் ரஜினியை வைத்து சிவாஜி என்ற மாபெரும் ஹிட் படத்தினைக் கொடுத்த பின் மீண்டும் இணைந்த படம்தான் எந்திரன்.
இந்தக் கதையானது முதலில் கமலை மனதில் வைத்து எழுதினாராம் இயக்குநர் ஷங்கர் பின் அவரால் நடிக்க முடியாமல் போகவே ரஜினி இதில் வந்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் ஷுட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒரேஒரு காட்சிக்காக ரஜினிகாந்த ரீ-டேக் வாங்கிக் கொண்டே இருந்தாராம்.
STR-ன்னா ஒண்ணும் சும்மா இல்ல… தந்தையைப் போல நாடி நரம்பெல்லாம் சினிமா இரத்தம் ஊறிய சிம்பு
இயக்குநர் ஷங்கர் அவரிடம் இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் போகவே இந்தக் காட்சியை நாளை படமாக்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு பேக்கப் செய்தாராம். ரஜினிக்கு ஒன்றும் புரியாமல் ஷங்கரின் உதவியாளர் ஒருவரை அழைத்து ஏன் என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளார். உடனே அந்த உதவியாளர் இந்தக் கதை கமலுக்காக எழுதப்பட்டது இதில் நீங்கள் நடிக்கும் போது கமல்ஹாசன் போன்று உங்களுக்கு நடிக்கத் தெரியவில்லை வெறும் ஹீரோயிசம் மட்டுமே இருக்கிறது என்று சொல்லியவுடன் ரஜினியின் முகம் மாறி வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.
பின்னர் மறுநாள் ரஜினி தன்னுடன் இருவரை அழைத்து வந்து ஷுட்டிங் ஸ்பாட்டில் மீண்டும் அந்தக் காட்சிக்கு தயாராகிவிட்டு அந்த உதவியாளரை அழைத்திருக்கிறார். ஷங்கர் என்னவென்று கேட்க முந்தைய நாள் நடந்தவற்றைக் உதவியாளர் கூறியதும் ஷங்கர் பதறிப் போய் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் இருந்தாராம்.
பின் ரஜினி அந்த உதவியாளரை அழைத்து நேற்று நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கேட்க அவரும் தயங்கிய படி ரஜினி அழைத்து வந்தவர்களின் முன்னிலையில் சொல்ல மூவரும் வாய்விட்டுச் சிரித்திருக்கிறார்கள். அப்பொழுது ரஜினி சொன்னராம். பார்த்தீர்களா எனக்கு கமலைப் போல் நடிக்க வரவில்லை என்பதை நீங்கள் சொல்லினீர்களே இப்போது இவரும் சொல்கிறார் என்றுகூறி கலாய்திருக்கிறார். இந்தத் தகவலை வலைபேச்சு ஆனந்தன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தன்மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை குறையாக எடுத்துக் கொள்ளாமல் அதை தனது வளர்ச்சியின் அடையாளமாகக் கருதிய ரஜினி பின்னர் அந்தக் காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தராம். எந்திரன் படத்தின் வெற்றியை எல்லோரும் அறிந்ததே.