10 நாட்களில் வசூல் இத்தனை கோடியா …? தெறிக்க விடும் மஞ்சும்மல் பாய்ஸ்…

By Meena

Published:

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் 2006 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து எடுக்க பட்ட படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான இப்படத்தில் பெரும்பாலான வசனங்கள் தமிழில் வருவதால் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் மஞ்சும்மல் பாய்ஸ் அமோக வரவேற்ப்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.

1821 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பி. எஸ். வார்டு என்பவர் ஒரு குகையை கண்டுபிடித்தார். அந்த இடத்திற்கு ‘டெவில்ஸ் கிட்சன்’ என்று பெயரிட்டார். பெயருக்கு ஏற்றார் போல் அந்த இடம் திகிலூட்டுவதாக தான் இருக்கும். 1991 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடித்த குணா படத்தை இந்த குகையில் படம்பிடித்தனர். அதற்கு பிறகு இந்த குகை ‘குணா குகை’ என்று அழைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

11 நண்பர்கள் கொண்ட குழு கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அதில் ஒருவர் குணா குகையில் சிக்கி கொள்கிறார். அவரை எப்படி மீட்கிறார்கள் என்பது மீதி கதை. இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் தமிழக மக்களும் இப்படத்தை விரும்பி பார்த்து ரசிக்கின்றனர்.

manjummel boys, actor kamalhaasan

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்த குணா திரைப்படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன் நானெழுதும் கடிதமே’ பாடல் மஞ்சும்மல் பாய்ஸில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு. இதற்காக படக்குழுவினரை நேரில் அழைத்து உலகநாயகன் கமலஹாசன் பாராட்டினார்.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி. தற்போது 10 நாட்களில் மஞ்சும்மல் பாய்ஸ் 50 கோடி வசூலித்து உள்ளது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். விரைவில் 100 கோடி வசூலை தொட்டு விடும் என்று படக்குழுவினர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.