கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குணங்களை அவர்வாழ்ந்த போது பேசாத நாம் இன்று அவர் மறைந்த பிறகு அவரைப் பற்றி தினந்தோறும் வரும் செய்திகளால் மனுஷன் எப்படி வாழ்ந்திருக்காரு என்று பெருமைப்படும் அளவிற்கு புகழ் சேர்த்திருக்கிறார். அவர் இல்லையென்றாலும் அவரின் தர்மங்களும், கொள்கைகளும் எக்காலத்திற்கும் நீங்காமல் நிலைத்திருக்கும் என்பது தான் உண்மை.
சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் வில்லனாக தனது பயணத்தை ஆரம்பித்து பின்னர் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் நிரந்த ஹீரோவாக ஜொலிக்கும் விஜயகாந்தின் தன்னடக்கத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் நடிகர் டெல்லி கணேஷ்.
அதில் ஒரு படத்தில் விஜயகாந்தின் அப்பாக நான் நடித்தேன். அப்போது வரும் ஒரு காட்சியில் அவர் கால் வலிக்கிறது என்பார். நானும் அவரின் காலைப் பிடித்து விடுவது போன்ற காட்சி. ஆனால் இதற்கு விஜயகாந்த் சம்மதிக்கவில்லை.
நேராக இயக்குநரிடம் சென்றிருக்கிறார். டெல்லி கணேஷ் எவ்வளவு பெரிய கலைஞன். மேலும் வயதிலும் என்னை விட மூத்தவர் அவர் என் கால்களைப் பிடித்து விடுவது போன்ற காட்சி நன்றாக இருக்காது. வேறு ஏதாவது வைத்துக் கொள்ளலாம் என்று இயக்குநரிடம் கூறியிருக்கிறார்.
நீங்க ஏன் இன்னும் திமுக-வில் சேரல..? கலைஞரின் கேள்விக்கு கமல் கொடுத்த சைலண்ட் ரியாக்சன்..
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த டெல்லிகணேஷ் உடனே இந்த இடத்தில் என்னை கணேசாக மட்டும் பாருங்கள். ஒரு தந்தை மகனுக்கு கால் பிடித்துவிடுவது மகன் மேல் கொண்ட பாசத்தினால் தானே அவ்வாறு பிடிப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று விஜயகாந்தை சமாதானம் செய்திருக்கிறார். பின்னர் விஜயகாந்த் ஒப்புக் கொண்டு டெல்லி கணேஷின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு தயங்கியபடியே அந்தக் காட்சியில் நடித்தார். இவ்வாறு டெல்லி கணேஷ் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைந்த போது கூட ஒரு பெரிய தலைவருக்கு உண்டாகும் கூட்டம் அளவிற்கு சேர்ந்து அவருக்கு தங்கள் இறுதிஅஞ்சலியைச் செலுத்தினர். மேலும் கேப்டனின் உடலானது அடக்கம் செய்யப்பட்டுள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் அவர் விட்டுச் சென்ற அன்னதானம், தர்மம் என்ற அறப்பணியானது அவரின் வாரிசுகளாலும், தொண்டர்களாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.