நீங்க ஏன் இன்னும் திமுக-வில் சேரல..? கலைஞரின் கேள்விக்கு கமல் கொடுத்த சைலண்ட் ரியாக்சன்..

By John A

Published:

உலக நாயகன் கமல்ஹாசன் திரைத்துறையில் பெரிய ஜாம்பவானாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் மக்கள் பணியாற்றவும் களத்தில் இறங்கி ஆரம்பித்த கட்சிதான் மக்கள் நீதி மய்யம். கடந்த 2018-ல் மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி அங்கு தனது அரசியல் வருகையை பதிவு செய்தார் கமல்ஹாசன். தற்போது சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பயணித்து வரும் கமல்ஹாசனை பல 40 வருடங்களுக்கு முன்னரே கருணாநிதி திமுகவில் சேர அழைப்பு விட்டிருக்கிறார்.

கடந்த 40 வருடங்களுக்கு முன். அதாவது 1983 வருடம் கமல்ஹாசன் அப்போது தான் திரைத்துறையில் முக்கிய கதாநாயனாக வளர்ந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது  அவருக்குக் கலைஞர் கருணாநிதியிடமிருந்து தந்தி ஒன்று வந்திருக்கிறது. அதில் நீங்கள் எப்போது திமுக-வில் சேரப் போகிறீர்கள் என்று கலைஞர் அனுப்பியிருந்தாராம். படித்துப் பார்த்த கமலல்ஹாசனுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அதை அப்படியே விட்டுவிட்டாராம்.

அதன்பிறகு பலமுறை கலைஞரைச் சந்தித்த போதும் கலைஞர் இந்த தந்தி குறித்து ஒருமுறைகூட அவரிடம் பதில் கேட்வில்லையாம். கமல்ஹாசனுக்கு இதில் விருப்பம் இல்லை அல்லது அரசியலுக்குள் வரத்  தயங்குகிறார் என நினைத்து கலைஞர் மீண்டும் அது பற்றி கேட்காமல் விட்டிருக்கலாம் என அவர் நினைத்துக் கொண்டாராம். இவ்வாறு அடுத்தவர்களுக்கும் வாய்ப்பு அளித்து அவர்களின் கருத்தினையும் கேட்டு முடிவெடுக்கும் குணம் கொண்டவராக கலைஞர் திகழ்ந்திருக்கிறார் என அவருக்குப் புகழாரம் சூட்டினார் கமல்.

கிள்ளிப் போட்ட ஏ.வி.எம் சரவணணுக்கு வெற்றியால் அள்ளிக் கொடுத்த விசு.. AVM நிறைவேற்றிய ஆசை

மேலும் தசாவதாரம் பட வேலைகளின் போது கலைஞரை சந்தித்த போதுபடத்தில் வரும் பத்து கதாபாத்திரங்களில் ஒன்றான வின்சென்ட் பூவராகன் என்ற கேரக்டர் மாங்குரோவ் காடுகள் குறித்த விழிப்புணர்வை கூறும் விதமாக படமாக்கப் பட உள்ளதாக கலைஞரிடம் கூறிய போது, அது வேண்டாம் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அதில் அந்த கேரக்டரைப் பயன்படுத்துமாறு கூறியுள்ளார். பிறகு யோசித்த கமல் மணல் கொள்ளைக்காக குரல் கொடுக்கும் வகையில் அந்த கேரக்டரை உருவாக்கினார்.

மேற்கண்ட தகவலை கமல்ஹாசன் கலைஞர் கருணாநிதி பற்றி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.