சீனியர் நடிகையை கட்டிபிடிக்கும் காட்சியில் பயந்த ரஜினி.. கோபமாக திட்டிய பாலச்சந்தர்

By John A

Published:

எந்த ஒரு புதுமுக நடிகரும் காதல் காட்சிகள், ஹீரோயினுடான நெருக்கமான காட்சிகளில் முதன் முதலில் தொடும் போது அவர்களுக்குள் கூச்ச உணர்வும், பயமும் இருக்கும். நாளடைவில் நடிக்க நடிக்க அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி அது நடிப்பு என்று இயல்பு நிலை வந்து விடும். இது போன்றதொரு சம்பவம் சூப்பர் ஸ்டாருக்கே நடந்தது. அப்போது அவர்கள் படத்தின் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். ரஜினி சுஜாதாவைக் கட்டிப்பிடிக்கும் காட்சி ஒன்று நடக்க வேண்டும். ரஜினிக்கோ உள்ளூற பயம். ஏனெனில் சுஜாதா சீனியர் நடிகை. மேலும் அவருக்கு கூச்ச சுபாவம் வேறு.

இருந்தும் பயத்தை வெளிக்காட்டாமல் நடிக்கத் தயாரானார். கேமரா ஓடத்துவங்க, ரஜினி பட்டும் படாமலும் சுஜாதாவை கட்டித் தழுவினார். மூன்று டேக் எடுத்தும் பாலசந்தருக்கு திருப்தி ஏற்படவில்லை. காட்சி எதிர்பார்த்தபடி வரவில்லையே என்ற கோபத்தில் பாலச்சந்தர் ரஜினியிடம், “நீ சரியில்லை. பேசாமல் நீ வீட்டுக்குப் போ” என்று கூறிவிட்டு பாலச்சந்தர் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு புறப்பட்டார்.

இந்தச் சம்பவத்தினால் ரஜினி இடிந்து போய் விட்டார். தனது நடிப்புலக வாழ்வுக்கு வழி வகுத்த பாலச்சந்தர் எதிர்பார்த்த அளவு தன்னால் நடிக்க முடியவில்லையே என்று அன்று இரவெல்லாம் வருத்தத்தில் இருக்க இனி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஊருக்குப் போய்விட வேண்டியிருக்குமோ என்ற சிந்தனையும் எழுந்ததால் விரக்தியடைந்து போனார்.

மறுநாள் கவலை தோய்ந்த முகத்துடன் பாலச்சந்தரை ரஜினி பார்க்கச் சென்றபோது அவரது அசோசியேட் டைரக்டர், “நேற்று ஏம்ப்பா அப்படி நடிச்சே?” டைரக்டர் உன் மேல் நல்ல நம்பிக்கை வச்சிருந்தாரே!” என்று கேட்டார். அதற்கு ரஜினி, “சுஜாதா ஒரு பெரிய நடிகை. அவரைத் தொடுவதற்கே எனக்கு சங்கடமாக இருக்கும்போது எப்படிக் கட்டித் தழுவி நடிக்க முடியும்!” என்று கண் கலங்கியபடியே சொன்னார்.

பாதி பட ஷூட்டிங்கில் நடையைக் கட்டிய ரஜினி.. விடாத இயக்குநர்.. மீண்டும் உருவாக்கி ஹிட் கொடுத்த அதிசயம்
உடனே அசோசியேட் டைரக்டர் இதுக்குப் போயா கவலைப் படுற.. அதெல்லாம் சினிமாவில் சர்வசாதரணம்ப்பா என்று தைரியம் கூறி நடிக்க பின் பாலச்சந்தரிடமும் நிலைமையைக் கூறி மீண்டும் நான்கைந்து நாட்களுக்குப் பின் அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டபோது ரஜினி சரியாகச் செய்து முடித்தார்.

‘அவர்கள்’ படத்தில் தனக்கு ஏற்பட்ட அந்தச் சங்கட நிலை தான் ‘தப்புத் தாளங்கள்’ படப்பிடிப்பில் தன்னுடன் நடித்த புதுமுக நடிகருக்கும் ஏற்பட்டதைப் புரிந்து கொண்ட ரஜினி, அவரைத் தனியே அழைத்துச் சென்று சிநேக பாவத்துடன் பேசி தைரியப்படுத்திக் கொண்டிருக்கையில், பாலச்சந்தர் வேறு காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார்.