இன்றும் பொதுவெளிகளில் யாராவது கலர் கலராக ஜொலிக்கும் நிறங்களில் சட்டை அணிந்து சென்றாலோ அல்லது நம்மில் யாராவது கண்ணைப் பறிக்கும் கலர்களில் சட்டை அணிந்தாலோ என்ன ராமராஜன் கலர்ல சட்டை போட்டிருக்க என்ற கிண்டலடிப்பது வழக்கம்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் கிராமத்து வேடமா கூப்பிடுறா ராமராஜனை என்று சொல்லும் அளவிற்கு 1985 – 1995 களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்தவர் ராமராஜன். அவரது படங்களில் அவரது கதாபாத்திரங்களைக் காட்டிலும் அவரது உடைகளே கவனம் ஈர்க்கும் அளவிற்கு கலர் கலராக உடைகள் அணிந்து ரசிகர்கள் மனதிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோவாக ஜொலித்தார்.
மதுரை மேலூரைச் சேர்ந்த ராமராஜன் சினிமா ஆசையில் சென்னை வந்து தொடக்கத்தில் சினிமா கம்பனியில் ஆபிஸ் பாயாக வேலையில் சேர்ந்தார். பின் அதே அலுவலகத்தில் வரவுசெலவு நிர்வாகியாக வேலை பார்த்தார். மேலும் அதே நிறுவனம் எடுத்த ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குநராக வேலை வாய்ப்பு கிடைக்க சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார்.
‘மவனே உன் நெஞ்சுல இருக்க..‘ மகாநதி பட வசனத்திற்கு அர்த்தம் சொன்ன தலைவாசல் விஜய்
தொடர்ந்து நாயகனாகவே நடிக்க கரகாட்டக்காரன் படம் உச்சத்தில் ஏற்றி வைத்தது,. கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஓடிய கரகாட்டக்காரன் அப்போது வெளிவந்த ரஜினி, கமல் படங்களை பின்னுக்கு தள்ளி இவரை தனி அடையாளமாக்கியது.
இதேபோல்தான் இயக்குநரும், நடிகருமான சேரன். சேரனும் மதுரை மேலூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்தான். இவ்வாறு ராமராஜனும், சேரனும் ஒரே ஊர்க்காரர்களாக இருந்ததால் ராமராஜன் சேரனின் வளர்ச்சியை பார்த்து அகமகிழ்ந்தார். ராமராஜனை வைத்து பெண் இயக்குநர் ஷீலா எடுத்த படத்தில் சேரன் உதவி தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதனால் அவ்வப்போது இவர்களின் மீட்டிங்கும் நடந்தது. இந்நிலையில் சேரன் ராமராஜனுக்காக ஒரு கதை ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தார். அதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாகவும், ராமராஜன் அப்பாவாகவும் நடிக்க இருந்தது பின்னர் அப்படம் கைவிடப்பட்டது. சேரன் தனது வெற்றிக் கொடிகட்டு படத்திற்காக சிறந்த சமூகக் கருத்தைப் பதிவு செய்ததற்கான தேசிய விருதினைப் பெற்றார்.
இந்த விருதினைப் பெற்ற பின் சேரனை அவர் வீட்டிற்கே வந்து ராமராஜன் பாராட்டினாராம். மேலும் சினிமாவில் இன்னும் நிறைய இருக்கிறது. எனவே நன்றாகச் சம்பாதித்து பொருளாதாரரீதியாக வலுவாகிக் கொள் என்றும் அறிவுரை கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் ராமராஜன்.