ரஜினியை ஹீரோவாக வைத்து படம் எடுக்க இதுதான் காரணம்..! பிரபலம் சொல்லும் ஆச்சரிய தகவல்!

By Sankar Velu

Published:

எம்ஜிஆருக்கு அடுத்து தேவர் பிலிம்ஸ்சுக்கு அதிக வெற்பிப்படங்களைக் கொடுத்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். தேவர் பிலிம்ஸ்சின் நிறுவனர் சாண்டோ சின்னப்பாதேவர். அவரது மகன் நடிகரும், தயாரிப்பாளருமான தண்டபாணி ரஜினியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்ப்பட உலகில் எப்படி ஹீரோவானார் என்பதையும் அவரே சொல்கிறார் பாருங்கள்.

ஆரம்பகாலத்தில் எங்க அப்பா தான் அவரை ஹீரோவாக நடிக்க வச்சார். அதுக்கு முன்னாடி வரை கே.பி. சார் வில்லனா தான் நடிக்க வச்சார். எல்லாரும் சொன்னாங்க. கேபி சார் வில்லனா தான் பார்த்துக்கிட்டு இருக்காரு. நீங்க ஹீரோன்னு சொல்றீங்க…ன்னு கேட்டாங்க.

அவருக்குப் பல முகம் இருக்கு. ஹீரோவாக நடிக்கறதுக்கு ஒரு நெருப்பு இருக்கு. அதுதான் தாய்மீது சத்தியம் படம். படத்துல அவருக்கு கௌபாய் வேடம். படமும் நல்லா ஓடுச்சு. அதுல இருந்து தான் எங்கள் பயணம் தொடக்கம். படம் முடிச்ச உடனே எப்பவுமே தேங்காய் உடைச்சி பூஜை எல்லாம் பண்ணுவோம். அது முடிச்ச உடனே வீட்டுல வந்து படுக்கும்போது அப்பா காலமாயிட்டாரு.

TT
TT

அவரு சப்போர்ட்ல நாங்க தொடர்ந்து ரஜினி சாரை வச்சி படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கோம். அவரு வந்து எல்லா சூழ்நிலையிலும் எங்களுக்காக இது என் தாய்வீடுன்னு சொல்லி படம் பண்ணினார். அது மாதிரி அவரை வச்சி தமிழ்ல 6 படங்கள் பண்ணினோம். எல்லாமே நல்லா போச்சு. தர்மத்தின் தலைவன் கொஞ்சம் கேப் விட்டுப் பண்ணினோம்.

அதுவும் நல்லா இருந்துச்சு. அவருடன் பண்ணின எல்லாப் படங்களுமே அருமையா இருந்துச்சு. தாய்மீது சத்தியம் படத்துல அவரு கௌபாய் வேடத்துல குதிரை மீது வரும்போது செம மாஸா இருக்கும். நாமே குதிரை மேல ஏறி போகிற மாதிரி இருக்கும். அன்னை ஓர் ஆலயம் படத்துல சிங்கம், புலியுடன் தைரியமாக நடித்து இருந்தார் ரஜினி. சிங்கத்துடன் பைட் பண்ணுவாரு. அதைத் துணிச்சலா பண்ணினாரு.

ரஜினியுடன் இணைந்து இளையராஜா 60 படங்கள் வரை மியூசிக் பண்ணிருக்காரு. அன்புக்கு நான் அடிமை படத்தில் மான் கொம்பு வைத்து பைட் பண்ணிருப்பாரு. நல்லா ஒர்க் அவுட் ஆனது. ரஜினி ரொம்ப கரெக்ட்டா பண்ணினாரு. ரங்கா படமும் செம மாஸ் தான். அதுல பிளேபாய் கேரக்டர். பாட்டு செம மாஸா இருக்கும். அதுதான் பட்டுக்கோட்டை நம்மாளு சாங். சோழா ஓட்டல்ல 8வது ப்ளோர்ல எடுத்தாங்க. கமர்ஷியல் ஹிட்டான பாடல்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.