கிளைமேக்ஸை மாற்றச் சொன்ன பார்த்திபன்.. முடியாது எனச் சொல்லி எடுத்து ஹிட் கொடுத்த சேரன்!

By John A

Published:

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் வந்தாலும் உணர்வுப் பூர்வமாக கதைகளைச் சொல்லி மென்மையான மனித உணர்வுகளைக் கடத்தும் கதைகளுக்குச் சொந்தக்காரர் தான் இயக்குநர் சேரன். முதல் படத்திலேயே சாதி பாகுபாடை தனது எழுத்துக்களால் உடைத்தெறிந்த சேரன். அடுத்தடுத்து வந்த படங்களில் ஏதேனும் ஒரு சமுக ஊடல்களை கையில் எடுத்து அதை ஜனரஞ்சமாகக் கொடுத்து வெற்றி பெற்றவர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்து பின்னர் பாரதி கண்ணம்மா மூலம் தனது இயக்குநர் அவதாரத்தைத் துவங்கிய சேரன் அப்படத்தில் முதலில் நடிக்க அணுகியது கார்த்திக்கை தானாம். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சேரன் பாரதி கண்ணம்மா குறித்த பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

பாரதி கண்ணம்மா படத்தின் ஹீரோவே விஜயகுமார்தான். ஒரு சாதி வெறி பிடித்த மனிதர் அந்த சாதியை தூக்கி எறிவதுதான் படத்தின் கதை. இந்த கதையை அவரிடம் சொன்னபோது கார்த்திக் சரியாக இருப்பார் என சொல்லி அவரிடம் பேசினார். நானும் கார்த்திக்கை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார்.

விஜயகாந்த், சத்யராஜூக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய நூறாவது நாள்.. மொட்டை தலையில் மிரட்டிய வில்லாதி வில்லன்

ஆனால், அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க தயாரிப்பாளரிடம் பணம் இல்லை. இப்படியே 2 மாதங்கள் போய்விட்டது. தயாரிப்பாளர் மும்பை போய் தனது சொத்துக்களை விற்று கையில் 45 லட்சம் பணத்தோடு வந்தார். ஆனால், கார்த்திக் தனது கால்ஷீட்டை வேறு படத்துக்கு கொடுத்துவிட்டார். அதன்பின்னர்தான் அந்த படத்தில் பார்த்திபன் நடித்தார். அந்த படத்தில் ஹீரோவும் கதாநாயகியுடன் சேர்ந்து இறப்பது போல காட்சி வைத்தேன். இதை மக்கள் ஏற்கமாட்டார்கள். மாற்றிவிடுங்கள் என பார்த்திபன் சொன்னார். ஆனால், இதுதான் கிளைமேக்ஸ் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்’ என சேரன் கூறியிருந்தார்.

இவ்வாறு பல தடைகளைத் தாண்டி வெளிவந்த பாரதி கண்ணம்மா ரிலீஸ் ஆன பின்பு பல விமர்சனங்களைச் சந்தித்தது. இதனால் படம் சர்ச்சையாக இதுவே படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்து படம் வெற்றி வரிசையில் இணைந்தது. வடிவேலுவின் காமெடியும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்து.

அதன்பின் சேரன் இயக்கத்தில் வெளிவந்த தேசிய கீதம், வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், பொற்காலம் போன்ற படங்களும் ஹிட்டாகி முன்னனி இயக்குநராக தமிழ்சினிமாவில் அவரை உயர்த்தியது.