கில்லி ‘கொக்கர கொக்கரக்கோ‘ பாடல் இப்படித்தான் உருவாச்சா? அதென்ன சுராங்கனிகா மாலுகண்ணா வா..

By John A

Published:

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படான ‘ஒக்கடு‘ படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு உருவான படம் தான் கில்லி. கடந்த 2004-ல் வெளியான இந்தப் படம் அப்போதுள்ள விஜய் படங்களின் அத்தனை சாதனையையும் முறியடித்தது. அதற்கு முன்னதாக ப்ரண்ட்ஸ், காதலுக்கு மரியாதை படங்கள் விஜய்யின் ஹிட் லிஸ்ட்டில் இருந்தது. இதனை கில்லி முறியடித்து விஜய்க்கு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது.

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் என்ற மூவர் கூட்டணியுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இயக்குநர் தரணி தில், தூள், கில்லி என ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தார். வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியது. இப்படத்தில் இடம்பெற்ற கொக்கர கொக்கரக்கோ பாடலை எழுதியவர் கவிஞர் யுகபாரதி. இப்பாடல் உருவான விதம் பற்றி அவர் கூறும் போது, “தெலுங்கில் இந்தப் பாடல் அழகான மெலடியாக வந்திருக்கும். ஆனால் தமிழில் வரும் போது இதை துள்ளலிசைப் பாடலாக வித்யாசாகர் மாற்றினர். என்னிடம் வரிகள் கேட்ட போது முதலில் கொக்கர கொக்கரக்கோ என்று எழுதினேன். உடனே ஓகே சொல்லி அடுத்த மெட்டைப் போட்டார்.

பையன் நல்லா நடிப்பானா? கேள்வி கேட்ட பானுமதிக்கு நடிப்பால் பதிலடி கொடுத்த நடிகர் திலகம்..

இயக்குநர் தரணிக்கும் இந்தப் பாடல் பிடித்துப் போகவே தொடர்ந்து எழுதும் போது சங்கு சக்கரம் போல.. மனசு சுத்துற வேளை.. சுராங்கனிகா மாலு கண்ணா வா.. என்று எழுதினேன். ஆனால் சுராங்கனிகா என்ற வார்த்தைக்கு அர்த்தம் எனக்குத் தெரியாது. வேண்டாம் என மாற்றும் பொழுது தரணி இதுவே இருக்கட்டும் ஆனால் அர்த்தம் வேண்டும் என்று கூறினார். உடனே நாங்கள் சுராங்கனிகா பாடல் மூலம் புகழ்பெற்ற சிலோன் மனோகரிடம் இந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்டோம். ஆனால் அவரோ எனக்கு படத்தில் வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்.

ஒருவழியாக இறுதியில் இந்த வார்த்தைக்கு அழகான கடற்கன்னி என்று அர்த்தம் சொன்னார். ஆனால் அதற்கும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளதற்கும் சம்பந்தமே கிடையாது. இருப்பினும் பாடலின் அழகுக்காக இந்த வரிகள் சேர்க்கப்பட்டது என்று கூறினார். பின்னர் இந்தப் பாடல் உதித்நாராயணன், சுஜாதா குரலில் பதிவு செய்யப்பட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.