நடிகர் அரவிந்த்சாமி இந்த பிரபல நடிகரின் மகனா? அதிகம் வெளிவராத ரகசியம்!

By John A

Published:

சினிமாவில் கமல்ஹாசன், சிவக்குமாருக்கு அடுத்தபடியாக அதிகம் பெண் ரசிகைகள் கொண்ட நடிகராகத் திகழ்ந்தவர் அரவிந்த் சாமி. பச்சைத் தமிழரான அர்விந்த்சாமி  திருச்சியைச் சேர்ந்தவர். ஆனால் அவர் பார்ப்பதற்கு வட இந்தியர்கள் மிக அழகாகவும், கலராகவும் இருந்ததால் எளிதாக சினிமா வாய்ப்பு கிடைத்தது. தனது முதல்படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக தளபதி படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன்பின் இவரை ரோஜா படத்தின் மூலமாக கதாநாயகனாக உயர்த்தினார் இயக்குநர் மணிரத்னம்.  தொடர்ந்து மணிரத்னத்தின் பம்பாய், கடல், செக்கச்சிவந்த வானம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களில் ஆஸ்தான நாயகனாக இன்றுவரை அவரின் பல படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த் சாமி.

1985-களில் பிறந்த பலர் தனக்கு அரவிந்த்சாமி போன்று மாப்பிள்ளை வேண்டும் என்று கூறுவதிலிருந்தே அவரின் மேனரிசம், அழகு, பர்சனாலிட்டி போன்றவற்றால் பல இளம் பெண்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்தார். இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி பிரபல நடிகரின் மகன் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது.

நடிகர் அரவிந்த்சாமி வேறுயாருமல்ல. தமிழ் சினிமாவிலும், சீரியல்களிலும் தந்தை வேடங்களில் கலக்கிய பிரபல நடிகர் டெல்லி குமாரின் மகன் தான். மெட்டி ஒலி சீரியலில் ஐந்து பெண்களின் தந்தையாக வந்து பெண்களைப் பெற்ற நிஜ தந்தைகளின் உணர்வை அப்படியே பிரதிபலித்தார் அல்லவா..! அவரேதான்.

பணம் கேட்கப் போன இடத்தில் பாலுமகேந்திராவுக்கு கடன் கொடுக்காத கமல்.. என்ன செய்தார் தெரியுமா?

இந்த நிலையில் நடிகர் அரவிந்த்சாமி பற்றி அவருடைய தந்தை பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் “அரவிந்தசாமி என்னுடைய மகன்தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அவர் பிறந்ததுமே என்னுடைய அக்காவிற்கு குழந்தை இல்லாததால் அவரை தத்து கொடுத்து விட்டேன். அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர் அதிகமாக என்னிடம் ஒட்டிக் கொண்டது கிடையாது. வீட்டு நிகழ்ச்சிகள் போன்ற முக்கியமான நேரங்களில் வருவார். ஏதாவது தேவை என்றால் பேசிக் கொண்டு கிளம்பி விடுவார்.

அவரை அந்த அளவுக்கு அதிகமான பாசத்தோடு என்னுடைய சகோதரி வளர்த்து விட்டதால் அவர்களை தான் அம்மா அப்பா என்று மனதில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இன்றுவரை அப்படியே வாழ்ந்து வருகிறார் அவ்வளவுதான். ஆனாலும் எப்போதும் என்னுடைய மகன் அரவிந்தசாமி தான் இதில் எந்த மாற்றமும் இல்லை“ என்று அந்த பேட்டியில் டெல்லி குமார் எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.