கமல்ஹாசனின் உயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன்.. உலக நாயகனின் நிழலாகத் திகழ்ந்தவர் இவர்தானா?

By John A

Published:

கமல்ஹாசன் என்றதும் நினைவுக்கு வருவது அவரது பால்வடியும் களத்தூர் கண்ணம்மா முகமும், பரமக்குடியும் தான். கமல் பிறந்த இராமநாதபுரம் மண்ணிலே தானும் பிறந்து பின் சினிமாவுக்குள் நுழைந்து கமல்ஹாசனின் மனசாட்சியாகத் திகழ்ந்தவர்தான் ஆர்.சி. சக்தி. கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் இயக்குநர் மகேந்திரன், சந்தானபாரதி, பி.சி.ஸ்ரீராம், மணி ரத்னம், சுஜாதா, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மனோபாலா ஆகியோர் வரிசையில் சக்தியும் இடம்பிடித்திருந்தார்.

கமலும் ஆர்.சி.சக்தியும் எங்கே போனாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள். கமல் இருந்தால் அங்கே சக்தியைப் பார்க்கலாம். அதேபோல் சக்தி இருந்தால், ‘என்ன கமலைக் காணோம் என்று கேட்கும் அளவிற்கு இவர்களது நட்பு இருந்தது. இவர்கள் நட்பு ஆரம்பித்தது ஒரு சுவாரஸ்ய தருணம்.

ஆர்.சி.சக்தி அன்னை வேளாங்கண்ணி படத்தில் துணை இயக்குனர். கமலோ தங்கப்பன் நடன மாஸ்டர் குழுவில் துணை நடன இயக்குனர். அங்கே தான் இரண்டு கலை தாகங்களும் சந்தித்துக்கொண்டன. கோவளத்தில் ஷுட்டிங் இடைவேளையில் கமல் கடலில் குளிக்கலாம் என சொன்னதும் சரியென சொல்லி இருவரும் நீந்த கொஞ்சம் உள்ளே சென்றதும் கமல் தடுமாறி தண்ணீர் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முதல் வசூல் சாதனைப் படம் இதானா? சபதம் போட்டு வசூல் அள்ளிய ரகசியம்

சக்தி பயந்து போய் கமலை இழுக்க வாழ்க்கை முடிந்தது என்கிற நிலைக்கு சென்று விட்டார் சக்தி. கரையிலிருந்த இவர்களது உதவி ஒளிப்பதிவாளர்கள் பலரையும் அழைத்து காப்பாற்ற சொல்ல யாருமே வரவில்லை பயந்து கொண்டு. ஒரு வழியாக கமலை கரை சேர்த்து சோர்ந்து நடுங்கி உட்கார்ந்திருக்கிறார் சக்தி. கமல் கேஷுவலாக “வாங்கண்ணே போகலாம்..” எனச் சொல்ல முறைத்திருக்கிறார் சக்தி.  அப்போது முதல் வயதுக்கு மீறிய ஒரு நட்பு இருவருக்குள்ளும் குடிகொண்டிருந்தது.

கமல் திரையுலகை படித்துக்கொண்டிருக்கும் காலங்களில் அவருடைய சந்தேகங்களை அங்கிருக்கும் யாரிடமாவது கேட்டால் போ போ என எறிந்து விழுவார்கள். “ஒரு குளோஸப் எதுக்கு லென்ஸ் மாற்றி…ஒரு டிராலி ஷாட்டையே முகம் வரை கொண்டு போய் எடுக்கலாமே…” போன்ற சந்தேகங்களுக்கு…”அப்படியா…உன்னை மாதிரி ஆளு தான்யா சினிமாவுக்கு வேணும்…” என அள்ளி அணைத்துக்கொண்டவர் சக்தி.

கமல் இப்படிப்பட்ட படங்களில் நடிப்பது தான் நடிப்பு. இது தான் படங்கள் என வேறொரு சுவையை கமலுக்கு காட்டியவர் சக்தி. சக்தி படமெடுக்கலாம் என உதவி இயக்குனரிலிருந்து வெளியேறிய போது அவருக்கு கதை சொன்னவர் கமல் தான். “உணர்ச்சிகள்” என்று சக்தி எழுதிய கதைக்கு மெருகு கூட்டி எழுதிய அவரையே நாயகனாக்கியவர் சக்தி. சொல்லப்போனால் கமல் இந்தப் படத்தில்தான் தனது சினிமா வித்தை அனைத்தையும் கற்றுத் தெளிந்து கொண்டார்.

செமஸ்டருக்குப் போகாமல் சித்ரா பாடிய பாட்டு.. இளையராஜா கொடுத்த நம்பிக்கையால் தேசிய விருது வென்ற ஹிட் பாடல்!

சக்தியின் படங்கள் எடுக்கும் பாணி வேறானதாக தமிழ்த்திரையுலகில் உருவானதால் கமலின் பாணி சேராததாலும் கமல் அவருக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. விஜயகாந்தும் கமலும் சேர்ந்து நடித்ததே இல்லை என்று பலரும் சொல்லுவார்கள். ஆனால்,‘மனக்கணக்கு’ படத்தில், விஜயகாந்த் ஒளிப்பதிவாளர் கேரக்டரிலும் கமல், இயக்குநர் கதாபாத்திரத்திலும் இணைந்து நடித்தார்கள். அப்படி இணைத்தவர் ஆர்.சி.சக்தி. கமலே கை கொடுத்து தூக்கி விட்டார். அவரே நடித்துக்கொடுத்த அந்த நட்பில் ஒரு நன்றிக்கடன் இருந்தது.

தமிழக அரசின் விருதுகளையும் பல அமைப்புகளின் விருதுகளையும் பெற்றிருக்கிறார் ஆர்.சி.சக்தி. அந்தக் காலத்திலேயே தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். சின்னத்திரை இயக்குநர்களுக்கென ஒரு சங்கம் இன்றைக்கு இருக்கிறது. அதை உருவாக்கியவர் ஆர்.சி.சக்தி என்பது குறிப்பிடத்தக்கது.