தமிழ் சினிமாவின் முதல் வசூல் சாதனைப் படம் இதானா? சபதம் போட்டு வசூல் அள்ளிய ரகசியம்!

By John A

Published:

இந்திய சினிமா வரலாற்றில் இன்று பான் இந்தியா திரைப்படங்கள் 1000 கோடி வசூலைத் தாண்டி மகத்தான சாதனையைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் கே.ஜி.எப், ஜவான், ஜெயிலர், லியோ, துணிவு, காந்தாரா, பாகுபலி போன்ற படங்கள் வெளியாகி இந்திய சினிமா உலகின் வசூல் சாதனைப் படங்களாகத் திகழ்கிறது. ஆனால் தமிழில் எடுக்கப்பட்ட ஒரு படம் முதல் வசூல்சாதனைப் படமாகத் திகழ்கிறது. அந்தக் காலகட்டத்திலேயே 40 லட்சத்தை வாரிக்குவித்தது. அந்தப் படம்தான் ‘மங்கம்மா சபதம்‘.

ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் மங்கம்மா சபதம் என்ற படமும் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே 1943-ல் இந்தப்படம் வெளியாகி அப்பொழுதே வசூலை வாரிக் குவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ரஞ்சன் மற்றும் நடிகை வைஜெயந்தி மாலாவின் தாயார் வசுந்தரா தேவி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்கியவர் ஆச்சாரியார். இவர்தான் முதன் முதலில் ரஞ்சனை அறிமுகப்படுத்தியவர். சந்திரலேகா என்ற பிரம்மாண்ட படைப்பை கொடுத்த எஸ்.எஸ். வாசன்தான் இந்த மங்கம்மா சபதம் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

இப்படத்திற்காக ரஞ்சனை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தும் போது அவரது தந்தை முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறார். என் மகன் படித்து பெரிய டாக்டராக வேண்டும் என்று சொல்ல ஆச்சாரியார் மற்றும் அவரது உதவி இயக்குனரான வேப்பத்தூர் கிட்டு இவர்கள்தான் ரஞ்சனின் அப்பாவை சம்மதிக்க வைத்திருக்கின்றனர்.

செமஸ்டருக்குப் போகாமல் சித்ரா பாடிய பாட்டு.. இளையராஜா கொடுத்த நம்பிக்கையால் தேசிய விருது வென்ற ஹிட் பாடல்

மேலும் சந்திரலேகா படத்தில் சசாங்கன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவரும் ரஞ்சன்தான். அந்தப் படத்திலேயே ரஞ்சனின் நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்தது. அதன் மூலம்தான் மங்கம்மா சபதம் படத்தில் நடிக்க ரஞ்சனுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.

மங்கம்மா சபதம் படத்தில் ரஞ்சனுக்கும் வசுந்தரா தேவிக்கும் இடையே இருக்கும் காதல் காட்சிகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து எடுத்தாராம் ஆச்சார்யா. அந்தக் காலத்திலேயே மிகவும் நெருக்கமாக அந்த காட்சிகள் படமாக்கப்பட்டதாம். அதனால் அந்த நேரத்தில் இது சம்பந்தமாக இந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததாம் மங்கம்மா சபதம். அந்த காலத்திலேயே இந்தப் படம் பெற்ற வசூல் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 40 லட்சம் என்று சினிமா விமர்சகர் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். இதுதான் அதிக வசூலை பெற்ற முதல் தமிழ்ப்படமாம்.