தேவா போட்ட டைட்டில் தீம் மியூசிக்கை விரும்பாத ரஜினி.. ஆனால் இன்று வரை தொடரும் ரகசியம் இதான்..

By John A

Published:

வழக்கமாக ஒரு திரைப்படம் ஆரம்பிக்கும் போது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ அதன் தீம் மியூசிக்குடன் வருவது வழக்கம். அதன்பின் டைட்ல் கார்டில் இடம்பெறும். ஆனால் இந்தியத் திரையுலகில் ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் தான் பெயரில் கூட தீம் மியூசிக்குடன் வந்து அவரை ரசிகர்களைக் குஷிப்படுத்தும். வேறு யாருமல்ல நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அண்ணாமலை படத்தில் ஆரம்பித்த இந்த லோகோ டைட்ல் தீம் மியூசிக் இன்று வரை அவர் நடிக்கும் படங்களில் தொடர்கிறது.

இந்த இசையைக் கேட்கிற போதும், இசைக்கு ஏற்றாற் போல் சூப்பர் ஸ்டார் ரஜினி என தமிழிலும், ஆங்கிலத்திலும் வரும் இந்த ஓப்பனிங்கைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ரஜினியின் படங்களுக்கு முண்டியடித்துக் கொண்டு படம் ஆரம்பிப்பதற்கு முன் முதல் ஆளாக ஆஜராகி விடுவர்.

அந்த எழுத்தும், இசையும் வரத் துவங்கியதுமே விசில் சப்தங்களால் தியேட்டரே ஆர்ப்பரிக்கும். ரசிகர்களின் ஒலி புல்லரிக்க வைக்கும் நிகழ்வாக இருக்கும். இப்படிப்பட்ட இந்த தீம் மியூச்சிக்கை உருவாக்கியவர்தான் தேனிசைத் தென்றல் தேவா.  அண்ணாமலை படத்தில் முதன் முதலில் இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா ரஜினிக்கு இந்த மாதிரி ஒரு தீம் மியூச்சிக்கை இசையமைப்பாளரிடம் தேவாவிடம் கேட்க தேவாவும் இதுவரை ஜேம்ஸ்பாண்ட் பங்கள் என்றாலே அந்த இசைதான் ஞாபகத்திற்கு வரும் அதேபோல் ரஜினி படங்கள் என்றாலே இனி இந்த இசைதான் என்ற நோக்கில் அசத்தலாக ஒரு தீம் இசையைப் போட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..

பின்னர் ரஜினியிடம் இதைப் போட்டுக் காட்டிய போது ஏன் இதெல்லாம் எனக்கு இதெல்லாம் வேண்டாம் என நிராகரித்திருக்கிறார். ஏனெனில் மிகுந்த தன்னடக்கம் கொண்டவரான ரஜினி இந்த மாதிரியான பில்டப் புகழை விரும்பவில்லை. பின்னர் இந்த இசையின் அருமையை உணர்ந்த சுரேஷ்கிருஷ்ணா அண்ணமாலை படத்தைத் தயாரித்த கே.பாலச்சந்தரிடம் சொல்லிய போது கே.பாலச்சந்தர் தனது மாணவரான ரஜினியிடம் சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார். அப்படி உருவானது தான் இந்த மாஸ் தீம் மியூசிக்.

அண்ணாமலையில் ஆரம்பித்த அந்த இசை அதன்பின் படையப்பா, முத்து, அருணாச்சலம், சந்திரமுகி எனப் பல படங்களில் தொடர்ந்து கொண்டு வருகிறது.