மாற்றம் நிச்சயம் தேவை!.. விஜய்யின் பெரிய முடிவு இந்த அரசியல்.. ராம்சரண் மனைவி வாழ்த்து!

By Sarath

Published:

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதிபடுத்திய பிறகு பல திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் போன்ற பலர் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது டோலிவுட்டின் முன்னணி ஹீரோவின் மனைவியும் விஜய்க்கு வாழ்த்து தெறிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, அவர் அரசியல் கட்சியை தொடங்கியதால் முன்னதாகவே கமிட்டான தளபதி 69 தான் கடைசி படம் என அறிவித்துள்ளார்.

விஜய்க்கு ராம்சரண் மனைவி வாழ்த்து: 

அரசியலில் களமிறங்கிய விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை வைத்துள்ளார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார். வேறு எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதில்லை எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவே தளபதி 69 படத்துடன் திரைத்துறையை விட்டு விலகுவதாக கூறியிருந்தார். விஜய்யை திரையில் பார்க்க முடியாது என்பதை நினைத்து ரசிகர்கள் மிக வருத்தத்துடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று ஆந்திராவுக்கு படப்பிற்கு செல்லும் போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் விஜய்யின் அரசியல் வருகையை குறித்து கேட்கும் போது விஜய்க்கு என் வாழ்துக்கள் என கூறிவிட்டு சென்றார். விஜய்க்கு அரசியல் பற்றி என்ன தெரியும் எனவும், சினிமாவில் சம்பாதித்த பணத்தை காப்பாற்ற கட்சி தொடங்கியுள்ளார் என்று விமர்சனங்கள் செய்து வருகின்றனர். ஆனால் விஜய் எதையும் பொருட்படுத்தாமல் தனது அரசியல் பணியை ஈடுப்பாட்டுடன் செய்துவருகிறார். மேலும் கோட் பட ஷூட்டிங்கில் இருந்து ரசிகர்களை தனது புது லுக்கில் சந்தித்து செல்பி எடுத்துள்ளார்.

வாழ்த்தும் விமர்சனமும்:

இந்நிலையில் முன்னனி ஹிரோவான ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்தின் பெரும் வரவேற்பிற்கு பிறகு தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராம்சரண் மனைவி உபாசனா விஜயின் அரசியல் வருகை குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். “அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள விஜய்க்கு வாழ்த்து, சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் இந்நேரத்தில் விஜய் எடுத்துள்ள இந்த முடிவு மிகப் பெரிய விஷயம். அரசியலில் சாதித்த முதலமைச்சர்கள் பலர் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். தமிழ்நாட்டு மக்களுக்கு தற்போது புதிதாக ஒரு மாற்றம் தேவை” எனக் கூறியுள்ளார்.

தமிழிலும் மட்டுமல்லாமல் தெலுங்கிலிருந்தும் விஜய்க்கு வாழ்துகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால் விஜய்யின் மனைவி சங்கிதா வாழ்த்து கூறினாரா என விமர்சனங்கள் எழுந்துள்ளன.