வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். திடீரென சினிமாவில் இருந்து விலகப் போவதாகவும் இனிமேல் அரசியல் மற்றும் மக்கள் சேவை தான் என தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அறிவித்து விட்டார்.
வெங்கட் பிரபுவின் கோட் படத்திற்கு பிறகு விஜய் எந்த இயக்குநர் படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. டிவிவி தயாரிப்பு நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் வெற்றிமாறன் இயக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளன.
விஜய்யை இயக்குகிறாரா வெற்றிமாறன்?
விடுதலை 2ம் பாகத்தையும் முடித்து விட்டு சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாமில் அந்த படத்தையும் முதல் பாகத்துடன் சேர்த்து வெளியிட்டு பாராட்டுக்களை அள்ளி விட்டார் வெற்றிமாறன்.
வாடிவாசல் பக்கம் வராமல் சூர்யா பாலாவை கழட்டி விட்டது போல வெற்றிமாறனையும் கழட்டி விட்டு விட்டு இந்தியில் கர்ணன் மற்றும் சுதா கொங்கராவின் படங்களில் நடிக்கப் போகிறார் எனக் கூறுகின்றனர்.
இந்த நாவல் தான் கதையா?
இந்நிலையில், அதிரடியாக விஜய்யின் தளபதி 69வது படத்தை வெற்றிமாறன் இயக்கப் போகிறார் என்றும் கோட்டா நீலிமா எழுதிய Shoes of the Dead கதையை தான் விஜய்யை வைத்து வெற்றிமாறன் இயக்கப் போகிறார் என்கிற தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன.
விஜய்யின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகிறார் என்றும் அட்லீ இயக்கினால் நல்லா இருக்கும் என்றும் தெலுங்கு இயக்குநர் தான் இயக்கப் போகிறார் என ஏகப்பட்ட தகவல்கள் வலம் வருகின்றன.
இதில், எது உண்மை? எது பொய் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. கோட் படத்தின் படப்பிடிப்பை முடித்த உடனே நடிகர் விஜய் யார் இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் என்பது அதிகாரப்பூர்வமாகவே தெரிந்து விடும்.
பல வருடங்களுக்கு முன்பே நடிகர் விஜய்க்கு வெற்றிமாறன் கதை சொன்னதாகவும் எஸ்.ஏ. சந்திரசேகர் அந்த கதையை நிராகரித்து விட்டதாகவும் தொடர்ந்து பலமுறை விஜய்யை வைத்து இயக்க முயற்சித்து வருவதாகவும் வெற்றிமாறனும் பேட்டி அளித்துள்ளார்.
அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கப் போகும் விஜய் தனது கடைசி படத்தை கண்டிப்பாக அரசியல் படமாகவும் மக்களின் நாயகன் தான் நான் என்று அறிவிக்கும் படமாகவும் தான் இருக்கும் என்பது சந்தேகமில்லாமல் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது.
லியோ படத்துக்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் 600 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில், கோட் மற்றும் தளபதி 69 படங்கள் அவரது பாக்ஸ் ஆபிஸை உச்சாணி கொம்புக்கு கொண்டு சென்று அது அப்படியே பென்ச்மார்க்காக மாறி நிற்கும் என்றும் கூறுகின்றனர்.